பாஜகவிலிருந்து அண்ணாமலை நீக்கப்படுகிறாரா.. பரவும் தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Apr 01, 2025,06:22 PM IST

டெல்லி: தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக காணப்படுகின்றன .


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட விரிசல் தற்போது சரியாகி மீண்டும் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கடந்த 2024ம் ஆண்டு அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். இந்த பேச்சு அதிமுகவினர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இதனால், பாஜக - அதிமுக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டது. இனி எப்போது பாஜகவுடன் கூட்டணி என்பதே கிடையாது என்று அதிமுக தலைமை மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக கூறி வந்தனர்.




பலமுறை கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சிற்கே இடம் இல்லை என்று தெரிவித்து வந்தது. அதேசமயம் பாஜகவுடன் அதிமுக இணைந்தால் நான் பதவியை ராஜினாமா செய்வேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.


இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் என டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 45 நிமிடங்கள் பேசிவிட்டு சென்னை திரும்பினார்.

அதன்பின்னர் பாஜக கட்சி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.இதனால்   அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட காரணமாக இருந்த மாநில தலைவரை நீக்கம் செய்து விட்டு பாஜக-அதிமுக கூட்டணியை தொடர இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.


இந்நிலையில், புதிய மாநில தலைவரக்கான போட்டியில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் மாநில தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்