குளுகுளுவென மாறிய தமிழ்நாடு.. 24 மணி நேரத்தில்.. எந்த மாவட்டத்தில்.. எவ்வளவு மழை.. தெரியுமா?

May 10, 2024,05:22 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடும் வெயில் அடியோடு குறைந்து தற்போது கோடை மழை களை கட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


மே மாதத்தில் நிலவக்கூடிய அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வெப்பம் தணிந்துள்ளது. இதனால் காலநிலை சாதகமாக நிலவுவதால் மக்கள் குஷியில் உள்ளனர்.




தென்னிந்திய பகுதிகளின்  மேல் நிலவக்கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழ்நாட்டில் 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 6 மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் நேற்று பரவலாக மாலை நேரத்தில் நல்ல மழை பெய்து இருந்தது.


இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்ற விவரங்களை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் அதிகபட்சமாக மிக கன மழைக்கான 13 சென்டிமீட்டர்  மழை பதிவாகியுள்ளது. 


தேனி மாவட்டம் பெரியகுளம், மதுரை மாவட்டம் பேரையூர் ஆகிய இரண்டு ஊர்களில் தலா  9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


மேலும் குமரி மாவட்டம் புத்தன் அணை, ஸ்ரீவில்லிபுத்தூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


சென்னையில் இன்று காலை முதல் வானம் மூடி மூடிக் காணப்படுகிறது. வெயில் பெரிதாக இல்லை. சுட்டெரிக்கும் வெயில் குறைந்து கிளைமேட்டும் சூப்பராக இருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்