தேங்காய் பால் ரசம்.. சுவையைக் கலந்து.. நாவில் எச்சில் ஊறவைக்கும் தமிழ்நாட்டு ஸ்பெஷல்!

Dec 16, 2024,03:44 PM IST

தமிழ்நாட்டில் மறக்க முடியாத, நினைத்த உடனேயே நாவில் எச்சில் ஊறவைக்கும் உணவுகள் என பல உள்ளன.  அதில் ஒன்று தான் சுவையான தேங்காய் பால் ரசம். வழக்கமாக ரசம் என்பது ஜீரணத்திற்கான எளிமையான உணவு ஆகும். ஆனால் இந்த தேங்காய் பால் ரசத்தை, சுடசுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வயிறு நிறைவாக இருக்கும். 


இந்த தேங்காய் பால் ரசம் மற்ற ரச வகைகளை போல் இல்லாமல் சாதம் மட்டுமின்றி சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடனும் தொட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த சுவையான ரசம் எப்படி செய்யலாம் என தெரிந்து கொண்டு நீங்களும் ஒருமுறை செய்து டேஸ்ட் பண்ணி பார்த்துட்டு, எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

தேவையான பொருட்கள் :



1. தக்காளி - 1
2.பச்சை மிளகாய் - 4
3. புளி கரைசல் - 1 கப்
4. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
5. தண்ணீர் - 2 கப்
6. தேங்காய் பால் - 1 கப்
7. மிளகு - 1/2 ஸ்பூன்
8. சீரகம் - 1/2 ஸ்பூன்
9. பூண்டு - 8 பல்
10. தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
11. கடுகு - 1 ஸ்பூன்
12. வர மிளகாய் - 2
13. கறிவேப்பிலை - சிறிதளவு
14. பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
15. கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

செய்முறை :

1. தக்காளி, கறிவேப்பிலை இலைகள், பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
2. அதோடு புளி கரைசலை சேர்த்து, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூய் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
3.இந்த கரைசலோடு 2 கப் தண்ணீர் சேர்தஅது 10 நிமிடங்கள் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட்டு, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
4. மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் கொர கொரப்பாக அரைத்து, கொதிக்க வைத்த ரச கவலையுடன் இதனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. இப்போது தேங்காய் பாலையும் அவற்றோடு சேர்த்து, நன்கு கலந்து மிக குறைந்த தீயில் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
6. கடைசியாக ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், வர மிரகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, அந்த ரசத்தில் சேர்த்து, கொத்தமல்லி இலைகளை தூவி இறங்கி விட வேண்டும்.
7. சூடான சாதத்துடன் இந்த தேங்காய் பால் ரசத்தை சேர்த்து பரிமாறினால் இன்னும் வேண்டும், வேண்டும் என அனைவரும் கேட்ட வாங்கி சாப்பிடுவார்கள்.

நன்மைகள் :

உடல் எடை குறைக்க வேண்டும் என நினைப்பவரர்களுக்கு தேங்காய் பால் மிகச் சிறந்த உணவு. இந்த தேங்காய் பால் ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களுமே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடியவை. இவற்றில் தேங்காய்க்கு முக்கிய பங்கு உண்டு. தினமும் 40 கிராம் அளவிற்காவது சமைக்காத தேங்காயை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. வயிற்று புண், உடல் சூடு ஆகியவற்றிற்கு மிக மிக நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்