மேஜர் முகுந்த் வரதராஜனின் சரித்திர போரில் சிவ கார்த்திகேயன்.. அமரனின் உண்மைக் கதை!

Mar 05, 2024,06:08 PM IST

இம் மண்ணை காக்க, மண்ணுக்குள் சென்ற நாயகனின் சரித்திரமே "அமரன்".  அமர சரித்திரத்தை கதையாக இயக்குகிறார் ராஜ்குமார் பெரியசாமி. சமீபத்தில் பெரும் பேசு பொருளாக மாறிய படம் இது.


உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் படம்தான் அமரன். இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் வேடத்தில் சிவ கார்த்திகேயன் ஒரு துணிச்சலான வீரனாக நடை போடவுள்ளார். காமெடி, காதல் என்று கலக்கிய சிவ கார்த்திகேயனுக்கு இது புதிய சவாலான மற்றும் பெருமிதமிக்க வாய்ப்பாக இருக்கும். சாய் பல்லவியும் இச்சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பது கூடுதல் சுவாரஸ்யம். ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியாக உள்ள அமரன், இந்திய சினிமா வரலாற்றில் ஒரு சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  


சரி.. யார் இந்த முகுந்த் வரதராஜன்?.. ஒவ்வொரு இந்தியா குடிம‌க்களு‌ம் தெரிந்திருக்க வேண்டிய வீரர்தான் முகுந்த வரதராஜன். ஒரு இந்தியனாக நாம் ஒவ்வொருவரும் மேஜர் முகுந்த்துக்கு கடன்பட்டு இருக்கிறோம், கடமை பட்டு இருக்கிறோம்.


"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"


என்று பாரதியாரின் வீர முழக்கத்துக்கு ஏற்ப ஒரு வீரன் இருக்கிறான் என்றால் அது மேஜர் முகுந்த் வரதராஜன் ஆவார்.


இதழியல் படித்தும் இந்திய ராணுவத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் ராணுவ பயிற்சி பெற்று பின் 2006ம் ஆண்டு, ராணுவத்தின் 22வது இராஜ்புத் பிரிவில் லெப்டினன்டாக தடம் பதிக்கிறார். 2008ல் கேப்டனாக பதவி உயர்வு அடைந்தார். ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் ஒரு அங்கமாக பணியாற்றினார். 2009ல் தனது நீண்டகால காதலி இந்தூ ரெபேக்கா வர்கீஸை கரம் பிடித்தார். 2011ல் அஸ்ரேயா என்ற ஒரு பெண் குழந்தை பிறக்கிறார். 2012ல்  மேஜராக உருவெடுத்தார். 44 ராஷ்ட்ரிய ரைபிள் படையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நியமிக்கப்படுகிறார். 




பதட்டமும், பனியும் சூழ்ந்த கடுமையான பகுதியில் தன் பணியை மேற்கொள்கிறார். பயங்கரவாதிகள் ஊடுறுவியுள்ள ஷோபியான் பகுதியில்,பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை காக்கும் பொறுப்பில் தலைமை வகிக்கிறார் மேஜர் முகுந்த். 2013ல் ஜெய்ஷ் - இ - முகமது படையை சேர்ந்த அல்தாஃப் பாபா என்கிற தீவிரவாதி ஒரு ஆப்பிள் தோட்டத்திற்குள்  பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. மேஜர் முகுந்த் தன் குழுவுடன் விரைந்தார்.. ஒரு மினி போர் அங்கு வெடிக்கிறது.. எதிரியிடம் இருந்து புல்லட் தோட்டாக்கள் சரமாரியாக பறந்தது. அந்த பதட்டமான சுழலில் எதிரியின் தாக்குதல் பாணி மாறுவதை உணர்ந்தார் முகுந்த். 


அது என்னவென்றால் மிஷின் மோடில் இயங்கிய துப்பாக்கி மேனுவல் மோடிற்கு மாறியதை உணர்ந்தார் முகுந்த்.  இதனால் எதிரியின் புல்லட் குறைய ஆரம்பித்ததையும் உணர்ந்தார். மேலும் இத்தனை தோட்டாகள் தான் மீதம் இருக்கிறது என்று துல்லியமாகவும் கணித்தார். இதையடுத்து எதிரியின் தோட்டா காலியாகும் வரை யாரும் எதிரியிடம் நெருங்க வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்தார். மேஜர் கணித்தது போலவே எதிரியிடம் தோட்டாக்கள் தீர்ந்தது.. அவ்வளவுதான்.. புயலென பாய்ந்தது முகுந்த் படை.. எதிரியை நெருங்கியது.. அல்தாஃப் பாபா சுட்டு கொல்லப்பட்டான். மேஜர் முகுந்தனின் வழி காட்டுதலால் எதிரி மடிந்தான்.. மேலும் ராணுவ அதிகாரிகளுக்கும் எந்த ஒரு சேதாரமும் இன்றி  பாதுகாக்கப்பட்டனர்.


ஆனால்.. 2014ல் அந்த கோர சம்பவம் அரங்கேறியது,  ஷோபியான் மாவட்டத்தின் மக்கள் குடியிருப்பில் தீவிரவாதிகளின் தலைவன் அல்தாப் வாணி இருப்பதாக தகவல் கசிந்தது. இதை கேட்ட நொடியே உணவருந்தி கொண்டிருந்த மேஜர் முகுந்த் தன்னிடம் உள்ள படைகளோடு விரைந்தார். குடியிருப்பு பகுதி என்பதால் கனரக ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் சிறிய படையோடு விரைந்து புறப்பட்டார். ஏனெனில் பனி பகுதி என்பதால் விரைவில் இருள் சூழ்ந்து எதிரி தப்பிக்க நேரிடும் என்பதால் விரைந்து சென்று தீவிரவாதியின் இருப்பிடத்தை முற்றுகையிட்டார்.


தனது படையை வெளியே நிற்க சொல்லி விட்டு தன் நண்பர் சிப்பாய் விக்ரம் சிங்குடன் தீவிரவாதியை நெருங்கினார். உள்ளே மூன்று பயங்கரவாதிகள் இருந்தனர். எதிரிகளிடம் இருந்து துப்பாக்கி சூடு பலமாக இருந்தது. கையெறி குண்டுகளால் ஒரு எதிரியை தரைமட்டமாகினார். ஆனால் அந்தக் குழுவின் தலைவனோ, தன்னைக் காப்பதற்காக துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சினான். புகை மூட்டத்துக்கு நடுவே மற்றறு தீவிரவாதியும் தலைவனும் தப்பி ஓட முயற்ச்சிப்பதை காண்கிறார். தலைவனோடு இருக்கும் மற்றோறு தீவிரவாதியை தகர்க்கும் பொழுது தன்னுடன் வந்த நண்பர் விக்ரம் சிங் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டதை கண்டு மனமுடைந்த அடுத்த நொடியே தீவிரவாதியின் தலைவன் அல்தாப் வாணியை சுட்டு பொசுக்கினார் மேஜர் முகுந்த் வரதராஜன்.




வெளியில் உள்ள தன் படையிடம் எதிரியை அழித்துவிட்டோம், துரதிஷ்டவசமாக விக்ரம் சிங்கை இழந்து விட்டோம் என்ற செய்தியை அறிவிக்கிறார். பின் தனக்கும் காயமடைந்துள்ளதாக கூறுகிறார். அந்த தருனமே மயங்கி விழுகிறார் மேஜர் முகுந்த். அதிக ரத்த போக்கு ஏற்ப்பட்டதால் மருத்துமனைக்கு செல்லும் வழியிலே வீர மரணம் அடைகிறார் மேஜர் முகுந்த் வரதராஜன்.


எதிரி தப்பினால் பல்லாயிரம் இந்தியர்களின் உயிர் காவு போகும் என்று எண்ணி, என் மக்களை காப்பேன்   எதிரியை அழிப்பேன் என்று உயிரை துச்சமென கருதி துப்பாக்கி குண்டு மழைக்கு மத்தியில் உயிர் என்னடா உயிர்? என்று, சாவை எதிர்த்து போரிட்டவர். குண்டுகள் துளைத்தது கூட அறியாமல் எதிரியை துளைத்திருகிறார். இவ்வீர செயலை போற்றி, 2015ல் முகுந்த் வரதராஜனுக்கு மிக உயரிய விருதான "அசோகா சக்ரா " விருதை அரசு வழங்கி சிறப்பித்துள்ளது. இவ்விருதை முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் பெற்று கொண்டார். தன் கணவர் தனக்கு என்ன நேர்ந்தாலும் தைரியத்தோடு இருக்க வேண்டும் என்று கூறுவார். இதனால் கணவனின் இறுதி சடங்கில் கூட கண்ணீர் துளிகள் சிதறாமல், மேஜர் முகுந்தனின் மனைவி என்ற கர்வோத்தோடு இரும்பு பெண் மணியாக வீர நடை போடுகிறார் இந்து ரெபேக்கா வர்கீஸ் அவர்கள்.


அன்று ஆயிரக்கனக்கான மக்கள் உயிருக்காக தன் உயிரை பணயம் வைத்து சென்றார் முகுந்தன், இன்று இவரை முன்னோடியாக எடுத்து கொண்டு பலல்லாயிர இளைஞர்கள் இந்திய ராணுவத்திற்கு செல்கிறார்கள். அப்படிப்பட்ட வீரனின் கதையைத்தான் சொல்ல வருகிறது அமரன்... அதை தடபுடலாக வரவேற்க காத்திருப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்