மதுரை: கோவில் மாநகரமாம் மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே பத்தாம் தேதி வரை நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகம் அழைப்பிதழை வெளியிட்டுள்ளது.
மதுரையின் அடையாளமாக திகழும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிகழும் மங்கள வருடம், பசலி ஆண்டு சித்திரைத் திங்கள் 15ஆம் நாள் முதல் 27ஆம் தேதி வரை( 28.4 2025 முதல் 10.5.2025 வரை) வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான அழைப்பிதழை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திங்கட்கிழமை வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும். மறுநாள் ஏப்ரல் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10:35 மணிக்கு மேல் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று இரவு முதல் 12 நாட்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதில் நான்கு மற்றும் ஐந்தாம் நாட்களில் மட்டும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நான்கு மாசி வீதிகளில் வலம் வரமாட்டார்.மாறாக பாகற்காய் மண்டகப்படி மற்றும் ராமாயண சாவடி மண்டகப்படியில் எழுந்தருளி காட்சியளிப்பார். இதனைக் காண திரளான பக்த கோடிகள் சுவாமியை வரவேற்று உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வர்.
அதன்படி,
முதலாம் திருநாள்- ஏப்ரல் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, கற்பக விருச்சம்- வெள்ளி சிம்மவாகனத்தில் உலா.
இரண்டாம் திருநாள்- ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமை பூத- அன்ன வாகனம் உலா
மூன்றாம் திருநாள்-
மே 1 ஆம் தேதி வியாழக்கிழமை கைலாச பர்வதம்- காமதேனு வாகன உலா
நான்காம் திருநாள்-
மே 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தங்க பல்லக்கு உலா (அன்று காலை முதல் மாலை வரை வில்லாபுரம் பாகற்காய் மண்டபடியில் சுவாமி அம்பிகை எழுந்தருளல்)
ஐந்தாம் திருநாள்- மே 3ஆம் தேதி சனிக்கிழமை, தங்கக்குதிரை வாகனம்- வேடர் பறி லீலை (வடக்கு மாசி வீதி இராமாயணச் சாவடியில் எழுந்தருளல்)
ஆறாம் திருநாள்- மே 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ரிஷப வாகனம் உலா-சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை
ஏழாம் திருநாள்- மே 5ஆம் தேதி திங்கட்கிழமை நந்திகேஸ்வரர்- யாளிவாகன உலா
எட்டாம் திருநாள் மே 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, ஊடல் உற்சவம், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்- வெள்ளி சிம்மாசன உலா
ஒன்பதாம் திருநாள்- மே 7ஆம் தேதி புதன்கிழமை, திக்கு விஜயம்- இந்திர விமான உலா
பத்தாம் திருநாள்-மே 8ஆம் தேதி வியாழக்கிழமை, மீனாட்சி திருக்கல்யாணம்-
பூ பல்லாக்கு உலா
பதினோராம் திருநாள்- மே 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை,
திருதேரோட்டம்- சப்தா வர்ணச்சப்பர உலா
பன்னிரெண்டாம் திருநாள்- மே 10ஆம் தேதி சனிக்கிழமை, தேவேந்திர பூஜை- ரிஷப வாகன உலா
மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!
இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!
சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!
பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்
{{comments.comment}}