உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிரான வழக்குகள்..!

Apr 16, 2025,10:28 AM IST

டெல்லி: வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களையும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உச்ச நீதிமன்றம்.


நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல்  3 ஆம் தேதி வக்பு வாரிய  திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிராக பலரும் போர்க்கொடி ஏந்தினர். இருப்பினும் நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்பிக்கள் மற்றும் எதிராக 232 எம்.பிகளும் வாக்களித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மறுநாளும் மீண்டும் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு 128 எம்பிக்கள் ஆதரவாகவும், 95 எம்பிக்கள் எதிராகவும் வாக்களித்தால் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 



இதனையடுத்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதன் அடிப்படையில்  வக்பு வாரிய திருத்த மசோதா ஏப்ரல் 8 முதல் அமலுக்கு கொண்டு வரப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. 




 ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து தி.மு.க., காங்கிரஸ், திரிணாமுல், சமஜ்வாடி, ஆர்.ஜே.டி., ஜே.டி.யு., ஓவைசி எம்.பி, ஆம் ஆத்மி, 

ஒய்.எஸ்.ஆர்.சி.பி., த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனி நபர்கள் வழக்கு தொடர்ந்தனர்.‌

இதன்படி, வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக மொத்தம் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் அனைத்தையும் அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.


இந்த நிலையில் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட  73 மனுக்களையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய இரண்டு நீதிபதி அமர்வில் பட்டியலிட்டு விசாரணை நடத்த இருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

news

முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்தார்.. மநீம தலைவர் கமலஹாசன்.. என்ன விசேஷம்?

news

10 வருடங்களுக்கு பிறகு‌‌.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!

news

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்

news

உருது இந்திய கலாச்சார அடையாளம்.. மதத்தின் மொழியாக அதைப் பார்க்கக் கூடாது.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

news

யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!

news

தமிழ்நாட்டில் இருந்து மது, போதையை ஒழிக்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!

news

கூகுளில் மீண்டும் ஆட்குறைப்பு.. இந்த முறை இந்தியப் பணியாளர்களுக்கு பாதிப்பு வருமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்