- ஸ்வர்ணலட்சுமி
சிவன் இல்லையேல் சக்தி இல்லை சக்தி இல்லையேல் சிவன் இல்லை. இந்த தத்துவத்தை விளக்குவதற்காகவே அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் எடுத்தார் சிவபெருமான். சிவபெருமானின் பல அவதாரங்களில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் தனி சிறப்பும் தனித்தன்மையும் வாய்ந்தது.
அர்த்தநாரீஸ்வரர்= அர்த்தனாரி + ஈஸ்வரர் அதாவது அர்த்தம் என்றால் பாதி என்று பொருள் ,நாரி என்றால் பெண் என்று பொருள் .ஆணுருவமும், பெண்ணுருவமும் இணைந்து இருப்பதால் தான் அர்த்தநாரீஸ்வரர் என்கிற பெயர் ஈசனுக்கு வந்தது.
அர்த்தநாரீஸ்வரர் உள் கதை விளக்கம்:
சிவன் ,பார்வதி திருமணமான உடன் இயற்கையாகவே தன் அனுபவத்தை பார்வதியிடம் சிவன் பகிர்ந்து கொள்வார். உடனே சிவபெருமானிடம் பார்வதி ,"உங்களுக்குள் நீங்கள் அனுபவிக்கும் இந்த நிலையை நானும் அனுபவிக்க விரும்புகிறேன் ,அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?கூறுங்கள், எந்தவிதமான கடினமான செயலும் செய்ய நான் தயாராக உள்ளேன்" என்றார் பார்வதி தேவி.
அதற்கு சிவன் சிரித்து விட்டு, "தேவி ,நீ பெரிய சாதனை எதுவும் செய்யத் தேவையில்லை, என் மடியில் வந்து உட்கார்" என்றார் .பார்வதி ,சிவனின் இடது மடியில் அமர்ந்தார். சிவன் தன் பாதியை இழந்து பார்வதி தேவியை தன் பாதியாக சேர்த்துக் கொண்டார் .இவ்வாறு ஆண் பாதி பெண் பாதி உருவ அமைப்பில் அர்த்தநாரீஸ்வரர் உருவமாக மாறினார் சிவபெருமான் .பரவச நிலைஅடைந்தார் சிவபெருமான்.
திருச்செங்கோடு சிவன் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் தான் மூலவராக உள்ளார். இவர் மாதொருபாகன் என்றும் அழைக்கப்படுகிறார். உமாதேவி யாருக்கு அர்த்தநாரீஸ்வரி, பாகம் பிரியாள் என்ற பெயர்களும் உண்டு. காஞ்சி கைலாசநாதர் கோயிலில் அருள் பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரர் தென்னிந்தியாவிலேயே உள்ள பழைய வடிவங்களில் ஒன்று என்று கூறுகின்றனர். இங்கு சிவன் காளையில் ஏறி அமர்ந்தது போலவும், பார்வதி தேவி வீணையுடனும் காட்சி தருகின்றனர்.
ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் இல்லை என்கிற வாழ்க்கை தத்துவத்தை அதாவது ஆன்மீக ரீதியாக மட்டுமில்லாமல், வாழ்வியல் ரீதியாகவும் விளக்குகிறது அர்த்தநாரீஸ்வரர் அவதாரம்.
மேலும் ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமியுடன்
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}