தேர்தல் வேலைகள் காத்திருக்கு.. ஏப்ரல் 15 டூ 19 வரை.. பள்ளிகளுக்கு விடுமுறை.. கல்வித்துறை அறிவிப்பு

Apr 05, 2024,07:47 PM IST

சென்னை: ஏப்ரல் 15ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல் சம்பந்தமான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கட்சிகள், கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் என அனைத்து தரப்பினர்களும் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளிலில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இவர்களுக்கு மட்டும் தேர்தல் வேலைகள் என்று இல்லாமல், பள்ளி ஆசிரிகளுக்கும், அரசு ஊழியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 




அதற்காக, பள்ளிகளுக்கும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் இந்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், வருகின்ற  23ஆம் தேதியுடன் இந்த தேர்வுகள் நிறைவடைய உள்ளது. இதற்கு இடையில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் வசதிக்காக வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் தேர்வுகளுக்காக 22 மற்றும் 23ஆம் தேதிகளில் மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் ஒன்று முதல் மூன்று வரையிலான வகுப்புகளுக்கு தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அரசு பள்ளிகளுக்கு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்