ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது.. அண்ணாமலை கேள்வி!

Nov 30, 2023,05:05 PM IST

சென்னை: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என மழையில் தத்தளிக்கும் சென்னையின் நிலைமையை பார்த்து ஆதங்கப்பட்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை திமுகவை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்த வட கிழக்கு பருவ மழை சீசனிலேயே நேற்றுதான் மிகப் பெரிய அளவிலான கன மழையை சென்னை சந்தித்தது. கடந்த தென் மேற்குப் பருவ மழைக்காலத்திலும், நடப்பு சீசனிலும் கூட நேற்று வரை பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் தப்பியது சென்னை. ஆனால், சென்னையில் நேற்று  திடீரென பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அடித்து பெய்த மழையால் சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடானது. 




மிகப் பெரிய அளவிலான கன மழை கொட்டித் தீர்த்ததாலும், மேற்கு மாம்பலம் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. இருப்பினும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் எடுத்த அதிரடி மற்றும் துரித நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வேகமாக இறங்கி விட்டது. சில இடங்களில் மட்டும் நீர் வடியவில்லை.


பெரும்பாலான இடங்களில் கால்வாய் அடைப்புகள் சரிவர எடுக்கப்படாமல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக சென்னை வாசிகள் தண்ணீர் வாசிகளாக மாறி வீட்டிற்குள் நிற்கும் நீருக்கு மத்தியில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம்.


அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் மலை வெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி நடந்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் இருப்பதால், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது. ஒவ்வொரு அரசும் மழை நீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்க தொடங்கி விட்டார்கள்.


சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, வெள்ள நிவாரணப் பணியில் கடை நிலை ஊழியர்கள் முதல் மேல் நிலை அதிகாரிகள் வரை கடுமையாக உழைக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. இரவு நேரத்திலும் களத்திற்கு வருகிறார்கள். அதைப் பாராட்ட வேண்டும். அதேசமயம், அதிகாரிகள் கடுமையாக உழைத்தும், நிலைமையை முழுமையாகச் சீர் செய்ய முடியவில்லை என்றால், அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்று தான் பொருள். 


சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாக கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியதாக்கியிருக்கின்றன. தமிழக அரசு பாடம் கற்க இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்