ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் நடிகர்கள் தமிழ்நாட்டைக் கலக்கிக் கொண்டிருந்தபோது அவர்களை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகர் ஒருவர் இருந்தார்.. அவர்தான் ராமராஜன்.. யாருமே இப்போது நம்ப மாட்டார்கள்.. அப்போதே, அவர் ரஜினி, கமலை விட அதிக சம்பளம் வாங்கினார். அப்படி ஒரு நடிகர் இப்போதும் தெலுங்கு சினிமாவில் இருக்கிறார். அவர்தான் பிரம்மானந்தம்.
பிரம்மானந்தம்.. இந்தப் பெயரைக் கேட்டதுமே கபகபவென சிரிப்பு நம்மைத் தொற்றிக் கொள்ளும். அப்படி ஒரு பன்முகத் திறமை கொண்ட காமெடியன். இவர் நடிக்காத ரோலே கிடையாது.. ஹீரோக்களேப் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு மிரட்டலான நடிப்பைக் கொடுப்பவர். இவர் ஒரு படத்தில் இருந்தால், அந்தப் படத்தின் ஹீரோ பற்றி யாருமே கவலைப்பட மாட்டார்கள். மனிதர் சில நிமிடமே வந்தாலும் கூட சில்லாக்ஸாக தனது ரோலை செய்து விட்டு போய் விடுவார். அப்படி ஒரு அசாத்திய திறமை கொண்டவர்.
இந்தியாவில் உள்ள காமெடி நடிகர்களிலேயே இவர்தான் மிகப் பெரிய கோடீஸ்வர நடிகராம். நம்ப முடியவில்லை அல்லவா.. உண்மைதான். ரூ. 490 கோடி அளவுக்கு இவரிடம் சொத்து உள்ளதாம். ஆனால் அத்தனையும் இவரது கடுமையான உழைப்பால் வந்தது என்பதுதான் என்பதே இங்கு முக்கியமானது.
மிகப் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் பிரம்மானந்தம். ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டனபள்ளி அருகே உள்ள சகன்டிவரி பாலம் கிராமத்தில் பிறந்தவர்தான் பிரம்மானந்தம். அப்பா சாதாரண மர வேலை பார்த்து வந்தவர். பெரிய குடும்பம் என்பதால் சமாளிக்க சிரமப்பட்டார் பிரம்மானந்தத்தின் தந்தை. பிரம்மானந்தம் குடும்பக் கஷ்டத்தையும் தாண்டி கல்லூரி வரை படித்தவர். கல்லூரியில் ஆசிரியராக வேலையில் சேர்ந்து சில காலம் வாத்தியாரக இருந்துள்ளார். அப்போது நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். இவரது காமெடியான நடிப்பு பலரையும் கவரவே, டக்கென சினிமாவுக்கு மாற முடிவு செய்தார்.
நடிப்புடன் மிமிக்ரியும் நன்றாக தெரியும் என்பதால் இவரது நாடகங்களுக்கு செம கூட்டம் வருமாம். மக்கள் ஒன்ஸ்மோர் கேட்டு ரசிப்பார்களாம். அப்படி ஒரு நாடகத்தில் இவர் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் ஒரு இயக்குநரின் பார்வையில் பட்டு டிவி நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பகபகலு என்று தொடரில் நடித்தபோது அது பலரையும் கவர்ந்தது. அதன் மூலமாக சினிமா வெளிச்சமும் இவருக்குக் கிடைத்தது. ஜந்தியாலா என்ற இயக்குநர் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பட்டையைக் கிளப்பியது இவரது காமெடி நடிப்பு.
ஆஹா நா பெல்லன்டா என்ற அந்தப் படம் 1987ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு நான் ஸ்டாப் அட்டகாசம்தான். தொடர்ந்து படங்கள் குவிய டோலிவுட்டின் முன்னணி காமெடியனாக உருவெடுத்தார். இன்று அகில இந்திய அளவில் மிகப் பெரிய காமெடியர்களில் ஒருவராக வலம் வருகிறார். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் கூட பிரம்மானந்தம் சில படங்களில் நடித்துள்ளார். ஹீரோக்களுக்கு இணையான பிரபலமும் செல்வாக்கும் இவருக்கு உள்ளது.
ஒரு படத்துக்கு ரூ. 2 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம். இதுதவிர விளம்பரங்களிலும் கூட நடிக்கிறார் பிரம்மானந்தம். இவரது சொத்து மதிப்பு ரூ. 490 கோடி என்று சொல்கிறார்கள். ஹைதராபாத்தில் பிரமாண்ட பங்களா உள்ளது. ஆடி கார் உள்ளிட்ட பல்வேறு வகையான சொகுசு கார்கள் உள்ளன. விவசாயமும் பார்த்து வருகிறார். நல்ல ஓவியரும் கூட. அட்டகாசமாக ஓவியம் வரைவாராம் பிரம்மானந்தம்.
பிரம்மானந்தம் தவிர இந்தியாவின் இதர பணக்கார காமெடியன்கள் வரிசையில் பிரபல கபில் சர்மா வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ. 300 கோடியாகும். அதேபோல பாலிவுட் காமெடியன் ஜானி லீவரின் சொத்து மதிப்பு ரூ. 225 கோடியாகும். நடிகர் பரேஷ் ராவல் ரூ. 93 கோடி அளவுக்கு சொத்து வைத்துள்ளாராம். நம்ம ஊர் காமெடியன்களின் சொத்து மதிப்பு குறித்துத் தெரியவில்லை.
கடந்த 37 வருடமாக நடித்து வரும் பிரம்மானந்தம் வாழும் நடிகர்களிலேயே அதிக படங்களில் நடித்ததற்காக கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் கெளதமும் நடிகர்தான். ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் பிரம்மானந்தம்.
ஃபெஞ்சல் புயலால் கன மழை எதிரொலி.. வீடுகளுக்குள் பாம்பு புகுந்தால்.. இந்த நம்பரில் கூப்பிடுங்க!
Lunch box recipe: வாழைப்பூ அரைத்து விட்ட குழம்பு .. செம டேஸ்ட்டி.. சுப்ரீம் ஹெல்த்தி!
ஃபெஞ்சல் புயல் + கன மழை எதிரொலி.. சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்.. தாம்பரத்திலும் பாதிப்பு!
அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னையில் மிக கன மழை.. பறக்கும் ரயில் சேவை முற்றிலும் ரத்து.. புறநகர் மின் ரயில் சேவை குறைப்பு
முழுவீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
அம்பேத்கர் புத்தகம்.. டிச.6ல் விஜய் வெளியிடுகிறார்.. திருமாவளவன் வரவில்லை!
ஃபெஞ்சல் புயல் மழை எதிரொலி.. சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரிப்பு
ஃபெங்கல் புயல் : சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
{{comments.comment}}