சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் முருங்கைக்காயின் விலை அதிரடியாக அதிகரித்து 1 கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் இல்லத்தரசிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை முருங்கைக்காய் சீசனாகும். இதையடுத்து ஜனவரி பிப்ரவரியில் முருங்கைப்பூ பூத்து மார்ச்சில் காய் பிடிக்க ஆரம்பிக்கும். இடைப்பட்ட காலத்தில் பனிப்பொழிவு அதிகரிப்பதால் முருங்கைக்காய் சீசன் முடிவுக்கு வந்து விடும். இதனால் பனிக்காலத்தில் முருங்கைக்காயின் வரத்து படிப்படியாக வரத்து குறைய தொடங்கும்.
கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருவதால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சுற்றுவட்டாரத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் கணிசமாக குறைந்துள்ளது. அதேபோல் பனிப்பொழிவால் முருங்கைக் காயின் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரும் முருங்கைக்காயின் வரத்தும் மிகக் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் விலை 40 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூபாய் 200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சில்லறை விலையில் ஒரு கிலோ ரூபாய் 220 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு கிலோ முருங்கைக்காய் 150 வரை உயர்ந்து மொத்த விற்பனையில் ரூபாய் 200 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முருங்கக்காய் சீசன் முடிந்துவிட்ட நிலையில் வரும் நாட்களில் முருங்கைக்காயின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய காய்கறிகளின் விலை பட்டியல்:
தக்காளி ஒரு கிலோ குறைந்த பட்சமாக ரூபாய் 22 க்கும், அதிகபட்சமாக ரூபாய் 40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உருளைக்கிழங்கு 20- 32
பெரிய வெங்காயம் 40-70
இஞ்சி ரூ 50-120
பீன்ஸ் 20-40
பீட்ரூட் 30-50
பாகற்காய் 15-30
கத்திரிக்காய் 10-30
முட்டைகோஸ் 14-20
அவரைக்காய் 30-50
குடைமிளகாய் 10-30
கேரட் 30-55
காளிபிளவர் 10-15
சௌசௌ 14-20
சுரைக்காய் 10 -30
காலிஃப்ளவர் (ஒன்று) 10- 15
தேங்காய் (ஒன்று )25-35
குடைமிளகாய் 10-25
கருணைக்கிழங்கு 55-60
கோவக்காய் 20-30
வெண்டைக்காய் 20-40
மாங்காய் 20-40
புடலங்காய் 15- 30
சின்ன வெங்காயம் 30-70
முள்ளங்கி 10-20
சேனைக்கிழங்கு 20-40
எலுமிச்சை 30-50
பச்சை மிளகாய் 25 -30
முருங்கைக்காய் 80-180
வாழைக்காய் (ஒன்று) 3-7
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
{{comments.comment}}