பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் அதிரடி முடக்கம்.. மத்திய அரசு நடவடிக்கை..!

Apr 24, 2025,11:52 AM IST

டெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து, இந்தியாவிற்குள்  பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய  அரசு.


பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 28 பேர் பலியான சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


முன்னதாக, உலக நாடுகளுடன் நட்புறவுடன் செயல்பட்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இந்தியாவுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு. அந்த வகையில்  இரண்டு நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு சென்று பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து ராணுவ வீரர்கள் போல் உடைய அணிந்து இந்தியாவிற்குள் ஊடுருவி  சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதல் சம்பவத்தை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து விரைந்து அவசர அவசரமாக இந்தியாவுக்கு  வந்த அவர் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளார்.




அதன்படி,  இந்தியாவிற்குள் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளார். அதேபோல் இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தானியர்களுக்கு  இனி விசாக்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். 


இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தியாவிலிருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்:


இந்தியாவில் சார்க் விசா பெற்று வந்துள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. அவர்களுக்கு 48 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து இந்தியாவுக்கு வந்திருந்த பாகிஸ்தானியர்கள் குடும்பம் குடும்பமாக அட்டாரி- வாகா எல்லை வழியாக தங்கள் நாட்டிற்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


அதேபோல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரத்திற்கு  அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பையும் மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

news

காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!

news

தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!

news

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!

news

தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்த வேண்டும்: சீமான்!

news

ஆன்மீகக் குருக்களில் சிறந்தவர்.. அன்பையும் கருணையையும் போதித்த சிந்தனை.. சாய்பாபா!

news

பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் அதிரடி முடக்கம்.. மத்திய அரசு நடவடிக்கை..!

news

ஏறிய வேகத்தில் குறைந்து வரும் தங்கம் விலை... நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு!

news

கொல்வோம்னு மிரட்டுகிறார்கள்.. டெல்லி காவல் நிலையத்தில்.. கௌதம் கம்பீர் புகார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்