டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.‌. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!

Mar 20, 2025,06:57 PM IST

சென்னை:   டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், அமலாக்கத்துறை வரும் மார்ச் 25ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்க தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மது ஆலைகள், மது விற்பனை நிலையங்கள், டாஸ்மாக் தலைமை நிறுவனம் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. 




இந்த விவகாரம் தமிழகத்தில்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் டாஸ்மாக் விவகாரத்தில் தொடர்புள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு கட்சிகள்  வலியுறுத்தியது. குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாக பாஜக பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்தது. 


இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனம், அமலாக்கத்துறையினர் சோதனையின் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.  அந்த மனுவில் மாநில அரசின் அனுமதியின்றி பி எம் எல் ஏ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. ‌


இந்த நிலையில், டாஸ்மார்க் முறைகேடு விவகாரம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொய் சொல்ல வேண்டாம். அனைத்து செய்திகளிலும் வந்துள்ளது. இரவில் ஏன் சோதனை நடத்த வேண்டும் என நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.


அதற்கு பதில் அளித்த அமலாக்க துறையினர் நாங்கள் இரவில் சோதனை நடத்தவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறை பிடிக்கவும் இல்லை. யாரை துன்புறுத்துவமும் இல்லை என  தெரிவித்தது. 


இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி இவ்விவகாரத்தில்  மார்ச் 25 வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதே சமயத்தில் அமலாக்கதுறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்