The Greatest of All Time படத்தின் 2வது லுக்.. பர்ஸ்ட் லுக்கை விட தீயா இருக்கு பாஸ்!

Jan 01, 2024,06:47 PM IST

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் The Greatest of All Time படத்தின் 2வது லுக் வெளியாகியுள்ளது. இது நேற்று வெளியான முதல் லுக்கை விட பட்டையைக் கிளப்பும் வகையில் உள்ளது.


ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம்தான் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். விஜய்யின் 68வது படம் இது. இந்தப் படத்தின் டைட்டிலும், முதல் லுக்கும் நேற்று வெளியாகின.


படத்தின் டைட்டிலும் சரி, முதல் லுக்கும் சரி ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றன. டைட்டிலே ஆங்கிலத்தில் இருப்பதால் படமும் ஆங்கிலப் படங்களை மிஞ்சும் வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.




இந்த நிலையில் புத்தாண்டையொட்டி இன்று 2வது லுக்கை வெளியிட்டுள்ளனர். என்ன விசேஷம் என்றால் முதல் லுக்கை விட இந்த 2வது லுக் ரொம்ப ஸ்டைலிஷாக, கிராண்டாக உள்ளது. இதிலும் அப்பா, மகன் விஜய் இடம் பெற்றுள்ளனர். முதல்  லுக்கில் விமானத்திலிருந்து பாராசூட்டிலிருந்து இறங்கி வருவது போல இருந்தது. 2வது லுக்கில் அதி நவீன பைக்கை அதி வேகமாக ஓட்டுவது போல உள்ளது.


அப்பா பைக் ஓட்ட மகன் பின்னால் அமர்ந்திருக்கிறார். கையில் ஆளுக்கு ஒரு துப்பாக்கி.. தோட்டாக்கள் சீறிப் பாய்கின்றன. இருவரது கண்ணிலும் ஃபயர் தெரிகிறது. ஆனால் ரெண்டு பேருமே ஹெல்மெட் போடலை பாஸ்.. அதை நோட் பண்ணுங்க!


நேற்றைய ஸ்டில்லை விட இன்றைய ஸ்டில் படு சூப்பராக இருக்கிறது.. விஜய் அட்டகாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த லுக்கும் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. லுக்கே இப்படி தெறிக்க விடுதே.. படம் எப்படி இருக்கப் போகிறதோ..!

சமீபத்திய செய்திகள்

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்