ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

Apr 08, 2025,05:53 PM IST

சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் வெளியீட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது திரைப்பட தணிக்கை குழு.


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் குட் பேட் அட்லி.  இந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்  இசையமைத்துள்ளார்.


இந்த ஆண்டு அஜித் ரசிகர்களின் டபுள் ட்ரீட் ஆண்டு. வருடத் தொடக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், சிம்ரன், பிரியா வாரியர், பிரசன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. 


ஏனெனில் பல கெட்டப்பில் அஜித் இடம் பெற்றுள்ள இந்த ட்ரெய்லர் பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டிற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பட வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், 

படத்தின் புக்கிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த வாரம் ஃப்ரீ புக்கிங் தொடங்கி இதுவரை  18 கோடிக்கும் மேல் பெற்று வசூலில் கலக்கிக் கொண்டு வருகிறது. அதாவது கடந்த வாரம் முதல் 12 மணி ஷோவிற்கு மட்டுமே புக்கிங் செய்யப்பட்டு வந்தது. 




அஜித் ரசிகர்கள் ஃபர்ஸ்ட் ஷோவான 9 மணி காட்சிக்கு எப்போது புக்கிங் தொடங்கும் என எதிர்பார்த்து காத்து வந்தனர். தற்போது ஒன்பது மணி ஷோவிற்கு அனுமதி கிடைத்துள்ளது. டிக்கெட்டுகளும் அதிரடியாக விற்று தீர்ந்து ஹவுஸ்புல் ஆகிவிட்டது.


அஜித் குமார் எப்பவுமே திரையில ரொம்ப அழகா, கம்பீரமா தெரிவாரு. இந்த படத்துல அவர் நடிக்கிற கதாபாத்திரம் பல வித்தியாசமான குணாதிசயங்களோட இருக்கும்னு சொல்றாங்க. "குட் பேட் அக்லி"ன்னு படத்துக்கு பேரு வெச்சிருக்கறதால, ஹீரோ நல்லவனா, கெட்டவனா இல்ல ரெண்டுமே கலந்தவனா இருப்பானோன்னு தோணுது. படத்தோட டீசர்ல பார்த்தா இது ஒரு ஜாலியான ஆக்ஷன் காமெடி படமா இருக்கும்னு தெரியுது. 


வழக்கமான ஆக்ஷன் அஜீத்தையும், காமெடி அஜீத்தையும் இப்படத்தில் கலந்து கட்டி விருந்து படைத்திருக்கிறார் ஆதிக் என்று நம்பலாம். 

படத்தோட கதை இன்னும் சரியா தெரியல. ஆனா ஒருத்தர் தன்னோட பழைய தப்பான வாழ்க்கைய விட்டுட்டு புதுசா வாழ முயற்சி பண்றாரு.. அப்போது அவர் சந்திக்கும் சவால்கள்தான் படம் அப்படின்னு  சொல்றாங்க. படத்துல நிறைய சஸ்பென்ஸும், எமோஷனல் சீன்களும் இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.


படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் மியூசிக் போட்டுருக்காரு. அவரும் டைரக்டர் ஆதிக்ரவிச்சந்திரனும் இதுக்கு முன்னாடியே சேர்ந்து வேலை செஞ்ச படங்கள் நல்லா இருந்திருக்கு. படத்துல இருந்து வந்த "ஓஜி சம்பவம்", "காட் பிளஸ் யூ" பாட்டு எல்லாம் ஏற்கனவே பட்டையைக் கிளப்பியுள்ளது. பின்னணி இசையும் ரொம்ப எனர்ஜியா இருக்கும்னு நம்பலாம்.


மைத்திரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்குறாங்க. அவங்க பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கறதுல பேமஸ். அதனால இந்த படமும் பார்க்க ரொம்ப கிராண்டா, டெக்னிக்கலா நல்லா இருக்கும்னு நம்பலாம். அபிநந்தன் ராமானுஜம் கேமரா, விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் பண்ணிருக்காங்க. செமையான டெக்னீஷியன்களும் படத்தில் கை கோர்த்திருப்பதால் படம் வேற லெவல் என்று இப்போதே ரசிகர்கள் குஷியாக இருக்கிறார்கள்.


இந்த நிலையில் அஜித் மற்றும் த்ரிஷா கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது திரைப்பட தணிக்கை குழு. மேலும் படத்தின் நீளம் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதே சமயத்தில் படத்தின் சென்சார் குழு  குட் பேட் அட்லி திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கூறியுள்ள நிலையில், படம் வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


மொத்தத்துல "குட் பேட் அக்லி" படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தா இருக்கும். அதே சமயத்துல ஆக்ஷன், காமெடி, எமோஷன் எல்லாம் கலந்து இருக்கறதால எல்லாருக்கும் புடிக்கிற மாதிரியும் இருக்கும். படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 நாள் தான் இருக்கு. தமிழ் சினிமாவுல இந்த வருஷம் இது ஒரு முக்கியமான படமா இருக்கும்னு நம்பலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

10 வருடங்களுக்கு பிறகு‌‌.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!

news

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்

news

அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!

news

முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

news

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு

news

காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

news

யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!

news

வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!

news

இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்