செல்போனைத் தூக்கிப் போடுங்க.. லைப்ரரிக்குப் போங்க.. புக் எடுத்துப் படிங்க.. அறிவு விசாலமாகும்!

Mar 21, 2024,10:56 AM IST

தேவகோட்டை:   கோடை விடுமுறை வரப் போகுது.. மாணவர்களுக்கு செம ஜாலிதான்.. செல்லிலேயே மூழ்கிக் கிடக்கலாம்.. கிரிக்கெட் பார்க்கலாம்.. வெளியூர்களுக்குப் போய் என்ஜாய் பண்ணலாம்.. இப்படி பல பிளான்களுடன் பலரும் இருப்பார்கள்.. அந்த பிளானில் அப்படியே லைப்ரரியையும் சேர்த்துக்கங்க என்று அட்வைஸ் கொடுத்துள்ளார் நூலகர் வைத்தீஸ்வரன்.


வாசிப்பு என்பது ஒரு சிறந்த பழக்கம். வாசிக்கும் போது அதில் உள்ள பல தகவலை நாம் அறிகிறோம். இதன் மூலம் நம் கற்பனைத் திறனை அதிகரிக்க முடியும் ..  எண்ணங்கள் அழகாகும். மனம் அமைதி கொள்ளும். அறிவுத்திறன் மேம்படும். மேலும் வாசிக்கும் போது பல விஷயங்களைப் பற்றிய ஆழமான கருத்துக்களை நாம் அறிய உதவுகிறது. அப்படி அறியும் போது நமது நினைவாற்றல் நன்கு செயல்பட்டு சிந்தனை வளர்ச்சியை தூண்டுகிறது. 




புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் நம் கற்றலுக்கான வழியாக கருத வேண்டும். இப்படிப்பட்ட புத்தகங்களை நம் வாசிப்பதற்கு நூலகங்கள் நமக்கு பெரும் பங்கு வகிக்கின்றன. செல்போன், டிவி போன்றவைகளில் நேரத்தை செலவழிக்காமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல புத்தகங்களை வாசிக்க நூலகங்களைப்  பயன்படுத்த வேண்டும். குறிப்பாக நாம் இந்த பழக்கத்தை கடை பிடித்தால் தான் நம் குழந்தைகளும் கடைபிடிக்கும் என ஒவ்வொரு  பெற்றோர்களும் எண்ணி குழந்தைகளுக்கு நூலகம் செல்லும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். 


அந்த வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் உள்ள மாணவர்கள் செல்போன் பார்ப்பதை தவிர்த்து நூலகத்தை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுரையை நூலகர் வைத்தீஸ்வரன் வழங்கினார். தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் களப்பயணமாக மாணவர்கள் பொது நூலகம் சென்றனர்.  அப்போது, பொது நூலகர் வைத்தீஸ்வரன் மாணவர்களுக்கு நூலகத்தின் பல்வேறு பகுதிகளை அறிமுகம் செய்து.. நூலக உறுப்பினர் அட்டையை பெறுவது எப்படி என்பதை.. விளக்கி பேசினார்.




அவர் பேசுகையில், தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி அதிக அளவில் நகர்புற நூலகங்களை திறந்துள்ளது. நூலகங்களில் அரியவகை புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன .இதனை மாணவர்கள் பயன்படுத்தி அறிவை பெருக்கி கொள்ள வேண்டும். மாணவர்கள் இளம் வயதில் வாசிப்பு திறனை அதிகரித்து பொது அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும். செல் போன்,தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து மாணவர்கள் அதிகம் நூலகத்திற்கு வந்து புத்தகங்களை படித்து செல்ல வேண்டும் என கூறினார்.




மேலும் இவருடன்  நூலகப் பணியாளர்கள் சுரேஷ் காந்தி, மீனாள் ஆகியோர் நூலகப் புத்தகங்களின் பயன்பாடு குறித்தும் விளக்கினார்கள். தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள்  பொது நூலகத்திற்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்