மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த 1972 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன் 24 வது அகில இந்திய மாநாடு இன்று தொடங்கி ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெற உள்ளது.
இக்கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு இன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதனை அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்தார். இதில் கேரள முதல்வர் பிரனாயி விஜயன், அனைத்து மாநில செயலாளர்கள், மக்கள் பேரவை நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாடு தமுக்கம் மைதானத்தில் திறந்தவெளியில் மக்கள் இசை பாடல்கள் மற்றும் பறை கொண்டாட்டத்துடன் துவங்கியது.பின்னர் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து செந்தொண்டர் அணி வகுப்புகள், மாநாடு தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 3 ஆம் தேதி நாளை மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் வரவேற்பு குழு தலைவர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில், முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அவருடன் கேரள முதல்வர் பிரனாயி விஜயனும், கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணா பைரேகவுடாவும் இணைந்து பேச உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் நான்காம் தேதி மாலை நடைபெறும் கருத்தரங்கில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி இயக்குனர் வெற்றிமாறன், உள்ளிட்ட பல்வேறு திரை கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. தொடர்ந்து ஏப்ரல் ஆறாம் தேதி விழா நிறைவாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணி முடிவடையும் இடமான மஸ்தான்பட்டி- விரகனூர் ரிங்ரோடு டோல்கேட் அருகில் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் கேரள முதல்வர் பிரனாயி விஜயன், தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத், ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேச இருக்கின்றனர்.
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
{{comments.comment}}