தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்.. 3 நாட்கள் நடக்கப் போகும் சூரியக் கதிர் விழும் அற்புத நிகழ்வு!

Feb 21, 2025,12:53 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


தாரமங்கலத்தில் உள்ள பிரபல சிவ தலமான கைலாசநாதர் கோவிலில், பிப்ரவரி 21, 22 ,23 ஆகிய மூன்று நாட்களும் சூரிய ஒளி மறையும் பொழுது அதன் கதிர் ராஜகோபுரம் முன் மண்டப நந்தி கொம்பு வழியே மீது விழும் அரிய நிகழ்வு நடைபெறும். இதனை பக்தர்கள் தரிசிக்கலாம் என்று கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.


சேலத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தாரமங்கலம். இங்குள்ள கைலாசநாதர் கோவில் மேற்கு பார்த்தபடி அமைந்த சிவன் கோவில் ஆகும் .இக்கோவில் தமிழர்களின் சிற்பக் கலைக்கு ஒரு பெரும் சான்று .இங்கு மூலவர் கைலாசநாதர் ,தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கின்றனர்.


தாரமங்கலம் பெயர் காரணம்:


சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தது இங்குதான் என்றும் ,திருமால் தாரை வார்த்து கொடுக்க மணவிழா நடைபெற்றது என்றும் , அதனால் தாரமங்கலம் என்ற பெயர் வந்தது என்றும் கூறுவர்.


கோவில் ஸ்தல வரலாறு:




கி.பி .பன்னிரண்டாம் நூற்றாண்டில் இங்கு ஆட்சி செய்தவர் கெட்டி முதலியார் என்பவர் ஆவார். தினந்தோறும் மேய்ச்சலுக்கு பசுக்கள் போகும் அப்போது ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட புற்றினில் தினமும் பால் சுறந்ததை கண்டறிந்து அவர் அந்த புற்றினை தோண்டினார். அதில் சிவலிங்கம் காணப்பட்டது. இதையடுத்து கெட்டி முதலியார் அங்கேயே சிவன் வழிபாடு செய்தார். அதன் பிறகு வந்த மன்னர்கள் அங்கு கோவில் எழுப்பியதாக வரலாறு கூறுகிறது.


தாரமங்கலம் கோவில் தனிச்சிறப்பு:


இக்கோவிலில் உள்ள சிவனை சந்திரனும் சூரியனும் வந்து தொழுது செல்வதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் உத்தராயன ,தட்சணாயன புண்ணியகால மாலை நேரத்தில் சூரியனுடைய கதிர்களும் ,சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது படுகின்றன மாசி 9, 10, 11 ஆகிய தேதிகளில் சூரியனுடைய கதிர்கள் ராஜகோபுரம் வாயில் வழியே வந்து நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து பின் மூன்று உள்வாயிலை கடந்து சிவலிங்கத்தின் மீது படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு.


சந்திரன், சூரியனுக்கு தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் உண்டு எனவும், தாரமங்கலம் என்ற பெயர் அதனால் வந்தது எனவும் வரலாறு கூறுகிறது.


சிங்கமும் ,மனித தலையும் கொண்ட யாழியின் வாயில் உள்ள கல் உருண்டையை நாம் உருட்டலாம் .ஆனால், கல்லை வெளியே எடுக்க இயலாது .இந்தச் சிற்பம் மிகவும் அற்புதமானது. கோபுரத்தை அடுத்துள்ள சிவப்பு பவளக்கல் படிகளில் 5 நிமிடம் அமர்ந்தாலே நம் உடல் வெப்பம் தணிந்து விடும். இந்த பெருமை எந்த கோவிலிலும் இல்லை.


கோபுரங்கள் ஒரு தேர் போலவும் யானைகள், குதிரைகள் கட்டி இழுப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் 90 அடி உயரம் வாசலில் 20 அடி வேங்கை மரத்தினால் ஆன கதவுகளில் 60 கூர்மையான உலகக் குமிழ்கள் வீதம் மொத்தம் 120 குமிழ்கள் பாதுகாப்பு அரணாக அமைக்கப்பட்டுள்ளது.




போர்க்காலத்தில் யானை வைத்து கதவுகளை முட்டி மோதும் போது குத்தி கிழிக்கும் வகையில் நுணுக்கமான அமைப்புடன் இந்த கதவு அமைக்கப்பட்டுள்ளது. போர்க்காட்சிகள் ,யானை, ஒட்டகங்கள் சோழ பாண்டிய செல்வங்களை பொது மூட்டையாய் சுமக்கும் காட்சி சித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


தன்னுடைய தாய் நாட்டிற்கு திரும்பச் செல்லும் மாலிக் கபூரை இப்பகுதியில் வழி மறுத்து தாக்குதல் நடத்த கெட்டி முதலியார் வீரர்கள் போர் வியூகம் அமைத்துள்ள காட்சி சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


எறும்புகள் நுழைவதற்கான துவாரம் உள்ள மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது. எறும்புகள் ஊர்ந்து அந்த சிற்பத்தின் காது வழியாக உள்ளே சென்று பின்னர் மூக்கு வழியாக வெளியே வரலாம் ,பின்னர் தாடியில் உள்ள துவாரங்கள் வழியே உள்ளே நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே செல்ல நுண்ணிய துவாரங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.


தமிழக மன்னர்களின் போர்க்காட்சிகள் கேடயத்துடனும் மாலிக்கபூரின் வீரர்களை எதிர்க்கும் காட்சிகள் பல சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. ராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ,ரதி மன்மதன் சிலை, கல் சங்கிலி ,கல் தாமரை, சிங்கம் என பல சிற்பங்கள் அற்புதமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தனை கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலை நம் வாழ்வில் கட்டாயம் காண வேண்டிய சிற்பக் களஞ்சியமாக தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது.


மேலும் ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்..  உங்கள் ஸ்வர்ணலட்சுமி!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

news

உலக தாய் மொழி தினம்.. தமிழுக்கு எதிராக நிகழ்ந்து விட்ட தீமைகள் அனைத்தும் எங்கிருந்து தொடங்கின?

news

PMSHRI திட்டத்தில் இணைந்தால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்: பாஜக தலைவர் அண்ணாமலை

news

ஏழை பிள்ளைகளை கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டமே புதிய கல்விக் கொள்கை திட்டம்.. சபாநாயகர் அப்பாவு

news

ஒரு நாட்டைக் கைப்பற்ற.. அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி.. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர்

news

Welcome To Tamil Nadu: நேற்று அந்த ஹேஷ்டேக்.. இன்று இந்த ஹேஷ்டேக்.. நடுவுல புகுந்த தவெக.. அடடே!

news

கூல் தோனி.. கிரிக்கெட் எதிர்காலம் குறித்து போட்ட சூப்பர் போஸ்ட்.. உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்!

news

உலக தாய்மொழி தினம் 2025.. தாயின் சிறந்த கோயிலும் இல்லை.. தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை!

news

மனைவியைப் பிரிந்தார் யுஸ்வேந்திர சாஹல்.. 4 வருடத்தில் கசந்து போன வாழ்க்கை.. ரசிகர்கள் ஷாக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்