தஞ்சை பெரிய கோவில் மகாசங்கராந்தி விழா.. பெரிய நந்திக்கு 2 டன் காய்கறி, பழங்களில் அலங்காரம்!

Jan 16, 2024,03:49 PM IST

தஞ்சாவூர்: மாட்டுப் பொங்கலையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்திக்கு 2 டன் காய்கறி , பழங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்படுவது வழக்கம். இவ்விழா மகாசங்கராந்தி விழாவாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்தாண்டிற்கான மகாசங்கராந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.


உலக பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்று தஞ்சை பெரிய கோவில். இங்குள்ள நந்தி பகவான் மிகவம் சிறப்புடையவர். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாகவும் இக்கோவில் திகழ்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்டது தான் இந்த நந்தி சிலை. 12 அடி உயரம், 19.5 அடி நீளம்,8.25 அடி அகலம் கொண்டது இந்த நந்தி சிலை.




ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு இந்த நந்தி பகாவனுக்கு விழா நடைபெறும். இந்தாண்டிற்கான விழா இன்று நடைபெற்று பெற்றது. முதலில் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 2000 கிலோவில்  மகா நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டது. 


கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய்,கேரட், நெல்லிக்காய் போன்ற காய்கறிகள், ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம்,மாதுளை, கொய்யா போன்ற பழங்களும், லட்டு, அதிரசம், முறுக்கு, உலர்ந்த பழங்கள் மற்றும் மலர்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆராதனைகள் செய்யப்பட்டன.


இதைத் தொடர்ந்து நந்தி முன்னர் 108 பசுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. சந்தனம், குங்குமம் இடப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பசுவிற்கும் தனிதனியாக பட்டு துணி போர்த்தப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.


மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நடந்த இவ் பூஜையில் பசுக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. நந்தியம் பெருமானுக்கு படைக்கப்பட்ட 2 டன் காய்கறி, பழங்கள் மற்றும் மலர்கள் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்