சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் அடுத்த படத்திற்குப் பூஜை போட்டு படப்பிடிப்பை தொடங்கி விட்டனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் இது. லியோ படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் த்ரிஷா இணைந்து நடித்திருந்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் அடுத்து விஜய்யை இயக்க போவது யார் என்ற டாக் ஓடிக்கொண்டிருந்த நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
விஜய்யின் 68வது படத்தை வெட்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் 3டி விஎப்எக்ஸ் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பிரசாந்த், சினேகா, லைலா, பிரபுதேவா, வைபவ், அஜ்மல் அமீர், யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒரு காலத்தில் மைக்கும், கையுமாக பாடல் பாடி அந்தக் கால இளசுகளை வசீகரித்த மோகனும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் மூலம் முதன்முறையாக விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைகிறார். அதேபோல பிரேம்ஜி அமரன் விஜய்யுடன் நடிப்பதும் இதுவே முதல் முறையாகும். மறுபக்கம், யுவன் சங்கர் ராஜாவுடன் 2வது முறையாக விஜய் இணைகிறார். இதற்கு முன்னர் விஜய்யின் புதிய கீதை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைத்திருந்தார்.
வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் இப்படத்திற்கு தளபதி 68 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. லியோ பீவர் அடித்துக் கொண்டிருக்கும் இந்த வேலையில், தற்பொழுது தளபதி 68 குறித்த பரபரப்பும் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டு விட்டது. இப்படம் எப்படி இருக்கும்,என்ன கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் பேசத் துவங்கி விட்டன எனலாம்.
{{comments.comment}}