thalaivar170 தலைவர் 170 ஹாட் அப்டேட் : கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்

Oct 01, 2023,09:44 AM IST

சென்னை : ரஜினியின் அடுத்த படமான தலைவர் 170 படம் பற்றிய புதிய ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த சூடு கொஞ்சமும் குறையாமல் சோஷியல் மீடியாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது. படம் எந்த அளவிற்கு ஹிட்டாகி, வசூலை வாரி குவித்ததோ அதை விட பல மடங்கு புகழை சேர்த்து உலகம் முழுவதம் செம ஹிட் அடித்து விட்டது தமன்னா ஆடிய காவாலா பாடல்.  ஜெயிலர் படத்தின் வெற்றி கொண்டாட்டங்கள் இன்னும் முடியாத நிலையில் ரஜினியின் அடுத்தடுத்த படங்களின் மீது தற்போது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது.




ரஜினியின் அடுத்த படமான தலைவர் 170 படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார் என ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரத்தில் திருவனந்தபுரத்தில் துவங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. முதல்கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் 10 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். அதுவும் வெல்லயானி விவசாய கல்லூரியில் தான் இந்த காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். அதோடு மற்றொரு தகவலாக இந்த படத்தில் ரிதிகா சிங்கும் ரஜினியுடன் இணைந்து நடிக்க போகிறாராம்.  

ஜெய்பீம் படத்தின் மூலம் பெரிய அளவில் பேசப்பட்ட டைரக்டரான டி.ஜே.ஞானவேல், ரஜினியை வைத்து படம் இயக்குகிறார் என்றதுமே படத்தின் கதை என்னவாக இருக்கும் என அனைவரும் ஆராய்ச்சியே செய்ய துவங்கி விட்டனர். இந்த படத்திலும் ரஜினி போலீஸ் அதிகாரி வேடத்தில் தான் நடிக்கிறார் என்று வேறு ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த படத்தில் இன்னொரு போலீஸ் கேரக்டரில் தான் ரிதிகா சிங் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 


இவர்கள் தவிர இந்த படத்தில் மஞ்சு வாரியரும் நடிக்கிறாராம். இவர் ரஜினியின் மனைவி கேரக்டரில் நடிக்கிறாராம். ஃபகத் ஃபாசிலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் தான் படமாக்கப்பட உள்ளதாம். இதுவும் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதை தான் என சொல்லப்படுகிறது.


சும்மாவே ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் தலைவர் 170 பற்றி இவ்வளவு தகவல்கள் வெளி வந்தால், அதுவும் ஷூட்டிங் இந்த வாரமே துவங்கப்பட உள்ளதால் சோஷியல் மீடியாவில் #Thalaivar170 என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி தீயாய் பரவ விட்டுள்ளனர்.


சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்