ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓட்டுப் போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில், 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்து, இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. ஜார்க்கண்டில் உள்ள கிரித், தன்பாத், ராஞ்சி, ஜம்ஷெட்பூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் உத்திரப்பிரதேசத்தில் 14, ஹரியானாவில் 10, பீகார், மேற்கு வங்கத்தில் தலா 8, டில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜம்மு-காஷ்மீரில் 1 தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தற்போது நடந்து வருகிறது. இந்த தேர்தலில் காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இன்று நடைபெறும் ஆறாவது கட்ட தேர்தலில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி சாக்ஷியும் வாக்களித்தார்.
மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான கவுதம் கம்பீர், கபில்தேவ் ஆகியோர் டெல்லியில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதில் கம்பீர் தற்போதைய சிட்டிங் எம்பி ஆவார். ஆனால் அவருக்கு மீண்டும் பாஜக சீட் தரவில்லை. இதனால் அரசியலை விட்டு அவர் விலகி விட்டது நினைவிருக்கலாம்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}