சிங்கப்பூர்: சிங்கப்பூர், மலேசியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தைப்பூச விழாவை தமிவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
தைப்பூச விழாவானது பழங்கால தொட்டு தமிழகத்தில் முருகன் சிவன் கோயில்களை கொண்டாடப்பட்டு வருகிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிப்பகங்களில் குறிப்புகள் உள்ளன. இந்ந நாளில் முருகனுக்கு தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அழகு குத்துதல், சர்க்கரை காவடி, தீபக் காவடி, பறவை காவடி, பால் காவடி, மச்ச காவடி, மயில் காவடி, சந்தன காவடி, சர்ப்ப காவடி, சேவற் காவடி, வேல் காவடி, விளக்கு காவடி என பல்வேறு வகையாக முருகனுக்கு காவடி எடுத்து தை பூச திருநாளை கொண்டாடுகின்றனர்.
சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் தைப்பூசத்திற்கு முதல் நாளிலிருந்து விழா களை கட்டும். இங்குள்ள முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நடப்பது வழக்கம். தைப்பூச நாளில் முருகன் வெள்ளி தேரில் வீதி உலா வருவார். காலையில் இருந்து மாலை வரை இந்த ஊர்வலம் நடக்கும். பக்தர்கள் பலவகையான காவடி எடுப்பார்கள், மற்றவர்கள் பெரும் திரளாக தேரினை இழுத்துச் செல்வார்கள்.
அழகு குத்தியும் இங்கு நேர்த்திக்கடன் செலுத்துவோரும் உண்டு. தைபூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இந்த விழாவில் தமிழர்கள் மற்றும் இன்றி சீனர்களும் கூட முருகன் கோவில்களுக்கு வந்து வணங்கி வேண்டுதல்களை செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவில் மலேசிய தமிழர்களிடையே புகழ்பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானது இந்த பத்துமலை கோவில். கோலாலம்பூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இது ஒரு மலைக்கோவிலாகும். சுண்ணாம்பு பாறைகளான இந்த மலைக்கோவிலில் ஏராளமான குகைகள் இங்கு அமைந்திருக்கும்.
மலையை ஒட்டி பத்து ஆறு ஓடுகிறது. பத்து மலை முருகன் கோயில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலை கோவிலில் குவிக்கிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலில் இருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருவார்கள். இதற்கு 8 மணி நேரம் ஆகுமாம்.
சிலர் காவடி ஏந்தியும், அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருவதும் உண்டு. மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுனில் உள்ள தண்ணீர் மலை கோவிலிலும் பினாங்கு தைப்பூசம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பினாங்கில் தைப்பூச திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு இங்குள்ள மாநில அரசும் பொது விடுமுறையும் அறிவிக்குமாம்.
ஈழம், மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா, பிஜி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகுளிலும் முருகனுக்கு கோவில்கள் இருப்பதுடன் அங்கும் தைப்பூச விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}