"கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா".. கேட்ட வரங்களை தரும் தைப்பூசத் திருநாள்!

Jan 25, 2024,10:10 AM IST

சென்னை : முருகப் பெருமானின் மிக முக்கியமான விரத நாள் தைப்பூச திருநாளாகும். தை மாதத்தில் வரும் பெளர்ணமியும், பூசம் நட்சத்திரமும் இணையும் நாளே தைப்பூச திருநாளாகும். உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூச திருவிழா 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.


இந்த நாளில் லட்சணக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை, பால்குடம், காவடி, அலகு குத்துதல் ஆகியவற்றை செய்து முருகப் பெருமானுக்கு தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.


முருகப் பெருமான், அசுரர்களை வதம் செய்து, தேவர்களை காப்பதற்காக அன்னை பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி திருநாளே தைப்பூச திருநாளாக நாம் கொண்டாடுகிறோம். முருகப் பெருமான் தாரகாசுரன் என்ற அசுரனை வதம் செய்ததும், சிவ பெருமான் அன்னை பார்வதியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடிக்காட்டியது இதே தைப்பூச திருநாளில் தான். 


ஞான வடிவான முருகன்




தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதிக்கு உரிய நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று ஞான வடிவான முருகப் பெருமானையும், குரு பகவானையும் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். தைப்பூசம் பழனி தலத்திற்கு உரிய விழா என்றாலும் இது உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும். இந்த நாளில் பழனிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்று முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம்


இந்த ஆண்டு மிகவும் விசேஷமாக தைப்பூசத் திருநாள் ஜனவரி 25ம் தேதி குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையில் வருகிறது. வியாழக்கிழமையில் வரும் பெளர்ணமி, குபேர பெளர்ணமி என அழைப்படும். இந்த குபேர பெளர்ணமி நாளில் முருகப் பெருமானுக்குரிய தைப்பூசமும் இணைந்து வருவது இன்னும் விசேஷமானதாகும். ஜனவரி 24ம் தேதி இரவே பெளர்ணமி திதி துவங்கி விடுகிறது. ஜனவரி 25ம் தேதியன்று இரவு 11.56 வரை பெளர்ணமி திதி உள்ளது. ஆனால் பூசம் நடத்திரம் ஜனவரி 25ம் தேதி காலை 09.14 மணிக்கு தான் துவங்குகிறது. இதனால் காலை 09.30 மணிக்கு பிறகு தான் தைப்பூச வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். இன்று அதிகாலையில் செய்யப்படும் பூஜை, தைப்பூச பூஜையாக கணக்கில் கொள்ளப்படாது.


கந்த சஷ்டி கவசம்.. கந்தர் அலங்காரம்.. கந்தர் அநுபூதி




காலை 09.30 முதல் 10.30 வரையிலும், மாலை 06.15 முதல் 07.30 வரையிலுமான நேரத்தில் முருகப் பெருமானை நினைத்து வீட்டில் விளக்கேற்றி தைப்பூச வழிபாட்டினை மேற்கொள்ளலாம். முருகனுக்கு இந்த நாளில் சர்க்கரை பொங்கல், பாயசம் என ஏதாவது ஒரு இனிப்பு படைத்து வழிபடலாம். முடியாதவர்கள் எளிமையாக இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து முருகப் பெருமானை வழிபடலாம். முருகனுக்கு செம்பருத்தி, செவ்வரளி போன்ற சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமாகும்.


கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி போன்ற முருகனுக்குரிய பதிகங்களைப் பாடி தைப்பூச நாளில் முருகனை வழிபடுவது சிறப்பானது. எதுவும் தெரியாதவர்கள் எளிமையாக சரவண பவ மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லி முருகனை வழிபடலாம். இந்த நாளில் வேல் வழிபாடு செய்வது வெற்றியை தரும். தைப்பூசத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும்.


பசிப்பிணி போக்கிய வடலூர் வள்ளலார்




வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என உலக உயிர்களின் பசிப் பிணியை போக்குவதற்காக தர்ம ஞான சபையை நிறுவி, குறைவில்லாமல் அன்னதானம் வழங்கிய வடலூர் வள்ளலார் எனப்படும் ராமலிங்க அடிகளார், இறைவனுடன் ஜோதியாக ஐக்கியமான திருநாளும் இதே தைப்பூச திருநாளில் தான் என்பதால் தைப்பூச திருநாள் கூடுதல் சிறப்பு பெறுகிறது.


வடலூர் தர்ம ஞான சபையில் தைப்பூசத்தன்று அதிகாலையில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். இறைவன் ஜோதி வடிவானவன் என உலகம் அறிய செய்த வள்ளலாரை இந்த நாளில் வழிபடுவது சிறப்பானது. அன்னதானம் வழங்கி, வள்ளலாரை மனதார நினைத்து, அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி.. தனிப்பெரும் கருணை; அருட்பெரும் ஜோதி என்ற மகா மந்திரத்தை சொன்னால் வீட்டில் எந்த நாளிலும் அன்னக்குறை என்பது ஏற்படாது.

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்