திக்கெட்டும் ஒலித்த அரோகரா கோஷம்.. முருகனின் அறுபடை வீடுகளிலும்.. களை கட்டிய தைப்பூச திருநாள்!

Feb 11, 2025,11:23 AM IST

சென்னை: தைப்பூச தினத்தை முன்னிட்டு இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் அரோகரா முழக்கங்கள் விணணைத் தொடுகின்றன. பக்தர்கள் அலை அலையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் அனைத்து முருகன் ஸ்தலங்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.


தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் தினங்களில் தைப்பூசத் திருநாள் மிகவும் முக்கியமான நாளாகும். தைப்பூசம் அன்று முருகப்பெருமானை வழிபடுதல் மிகவும் சிறப்பு. தைமாத முழுபௌர்ணமி நாளில் வரும் பூச நட்சத்திரம் அன்று தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.


இந்நாளில் முருகனை வழிபடுவதால் கல்வி ஞானம் செல்வம் என மூன்றிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் பாதை யாத்திரையாகவும் கிரிவலம் வந்தும் முருகப்பெருமானை தரிசிக்கின்றனர். அதே சமயத்தில் பக்தர்கள் விரதம் இருந்து அலகு குத்துதல், காவடி எடுத்தல், என தங்களின் நேர்த்திக் கடன்களையும் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர். இதனால் பொதுவாகவே தைப்பூசத் திருநாளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வது வழக்கம்.. 




தைப்பூச திருநாளை முன்னிட்டு இன்று முருகனின் அறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் பாலபிஷேகம், பன்னீர் அபிஷேகம்,  செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமான் காட்சியளித்து வருகிறார். இதனைக் காண பக்தர்கள் ஏராளமான பக்தர்கள் சாரை சாரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே சமயத்தில் பால்காவடி, பறவை காவடி, அழகு குத்துதல் என தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் எவ்வித இடையூறும் ஏற்படாமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை காவல்துறை செய்து வருகிறது. 


அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு வருகின்றனர். அதேபோல் கிரிவலமாக நடந்து வந்தும், பாதயாத்திரையாக நடந்து வந்தும் காவடி எடுத்தும் அரோகரா கோஷமிட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேரம் அதிகரிக்க அதிகரிக்க பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையை சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேரம் அதிகரிக்க அதிகரிக்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் சாமி தரிசனம் செய்ய சுமார் மூன்றிலிருந்து நாலு மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.  திருத்தணி மலை முழுவதும் பக்தர்களின் தலைகளாக காட்சியளிக்கிறது.


அதேபோல் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலையில் பக்தர்கள் பாதையாத்திரையாக நடந்து வந்தும், கிரிவலம் வந்தும் சாமி தரிசனம்  செய்து வருகின்றனர். குறிப்பாக  தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. அதேபோல் பக்தர்கள் காவடி எடுத்தும்,அழகு குத்தியும் பாதயாத்திரையாக நடந்து வந்து பழனி மலை முருகனை வழிபட காத்திருக்கின்றனர். வழி நெடுகியிலும் அரோகரா கோஷம், விண்ணை பிளக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் . நிற்பதற்கு கூட கால் வைக்க முடியாத அளவிற்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.


தைப்பூசத் திருநாளில் முருகனை வழிபட கூட்டம் அதிகரித்து வருவதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரை ஆக வரும் பக்தர்கள் சண்முக நதியில் குளித்துவிட்டு அங்கிருந்து காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்களுக்கும் இலவச பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மூன்று நாட்களுக்கு சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு அனைத்து வழிகளிலும் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



அதேபோல் சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, தோரணமலை, கழுகுமலை, சிறுவாபுரி முருகன் கோவில், சென்னை வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தைப்பூசத் திருநாள் களைகட்டி உள்ளது. அனைத்து முருகன் கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 


வெளிநாடுகளிலும் கோலாகல கொண்டாட்டம்


தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கூட தைப்பூசத் திருவிழா களை கட்டியுள்ளது. மலேசியாவின் பத்துமலை திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பத்துமலை முருகனை தரிசித்து வருகின்றனர்.


இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகன் கோவிலிலும் தைப்பூசத் திருவிழா களை கட்டியுள்ளது. இதுபோன்று தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாட்டு ஸ்தலங்களிலும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருநங்கைகள் அணி, சிறார் அணி, இளம் பெண்கள் அணி.. 28 அணிகளை உருவாக்கியது தமிழக வெற்றிக் கழகம்!

news

மின் தேவையில் தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

காங்கிரஸுடன் கூட்டணி இல்லை.. மமதா பானர்ஜி அதிரடி அறிவிப்பு.. வடக்கில் சிதறுகிறதா இந்தியா கூட்டணி?

news

மனித வாழ்க்கையில் முக்கிய பங்காற்றத் தொடங்கி விட்டது ஏஐ.. பாரீஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

news

Valentines week.. இமைகளின் பாஷைகளை.. இதழ் மணம் அறியும்.. கருங் கூந்தலின் சிரிப்பினை!

news

சேலத்தில்.. பஸ்ஸில் இடம் பிடிப்பது தொடர்பாக.. மாணவர்களிடையே மோதல்... ஒருவர் பலி

news

என்னாது.. பஞ்சாப் தேர்தலில் போட்டியிடப் போகிறாரா கெஜ்ரிவால்?.. பரபரக்கும் அரசியல் களம்!

news

திடீர் பயணமாக இன்று மாலை.. சென்னை வருகிறார்.. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

news

இந்தப் படம் ஏன் கூடாது என்பதுதான்.. காதல் என்பது பொதுவுடமை எடுக்க முதல் காரணம்.. ரோகிணி பளிச்!

அதிகம் பார்க்கும் செய்திகள்