-ஸ்வர்ணலட்சுமி
தைப்பூசம் என்பது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. தைப்பூசம் தமிழ் இந்து பண்டிகையாகும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குறிப்பாக முருக பக்தர்கள் இதனை சிறப்பாக விரதம் இருந்து கொண்டாடுகின்றனர்.
வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! குகனுண்டு குறையில்லை! கந்தன் உண்டு கவலை இல்லை! வழிபாடு செய்ய வறுமை நீங்கி செல்வம் பெருகும் வசதி வாய்ப்புகளும் கிடைக்கும். தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். காவடி எடுத்தல் மற்றும் பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்வுகள் முருகன் கோவில்களில் நடைபெறும்.
அழகு என்ற சொல்லுக்கு உகந்தவன் முருகன். இவன் தேவ சேனாதிபதி அதாவது தேவர்களின் சேனாதிபதி. ஆகையால் இவன் ஒரு போர் கடவுள் ஆவான் . முருகப்பெருமான் தர்காசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிதம்பரத்தில் உமாதேவியுடன் சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
முருகன் தன் அன்னை பார்வதியிடம் இருந்து அசுரனை அழிக்க வீர வேல் வாங்கிய நாள் இந்த தைப்பூச நாளாகும். இது தமிழ் மாதமான தை மாதம் வரும் முதல் பௌர்ணமி நாளில் பூச நட்சத்திரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. பழனி முருகன் கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும். பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக் கடனாக காவடி எடுத்துச் செல்வர் .அழகு குத்துதல் ,சர்க்கரை கா வடி ,பறவை காவடி, பால் காவடி ,மச்சக்காவடி, மயில் காவடி ,தீர்த்த காவடி என பலவகை காவடிகளை சுமந்து கோவில்களுக்கு கால்நடையாக பக்தர்கள் நடந்து வருவார்கள்.
முருகப்பெருமான் ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால் கோபித்துக் கொண்டு சிவன் ,பார்வதி ,விநாயகர் விட்டு பண்டார கோலத்தில் பழனி மலையில் குடியேறிய நாளையே தைப்பூசம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
கேரளாவில் தைப்பூசம் தைப்பூயம் என்று அழைக்கப்படுகிறது கடற்கரை தலமான திருச்செந்தூரிலும் தைப்பூசம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இங்கு முருக பக்தர்கள் மயில் காவடி ,சந்தன காவடி ,சேவர் காவடி, அன்னக்காவடி ,வேல் காவடி ,பால் காவடி, வாள் காவடி ,விளக்கு காவடி, ஏந்தி முருகனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வழிபடுவர்.
பிப்ரவரி 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம் இருப்பதால், காலை முதல் மாலை வரை முருகப்பெருமானை நினைத்து மனதார வழிபட வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும் ,வசதி வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம் .தைப்பூச தினத்தன்று அரசு விடுமுறையாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.
தைப்பூசம் நேரம் 20 25 பிப்ரவரி 10 ம் தேதி பூசம் நட்சத்திரம் திங்கட்கிழமை மாலை 6 :01 மணி முதல் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6:34 மணிக்கு முடிவடைகிறது. எனவே பூசம் நட்சத்திரம் நேரத்தில் தைப்பூச வழிபாடுகள் மேற்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!
இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!
சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!
பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்
{{comments.comment}}