ரமேஸ்வரம்: இன்று தை அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கடலில் நீராடி வழிபாடு செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
தை அமாவாசை என்பது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆடி, தை மற்றும் புரட்டாசி மகாளாய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் முக்கியமானதாகும். வருடத்தின் அனைத்து அமாவாசைகளிலும் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும் இந்த மூன்று அமாவாசைகளில் தவறாமல் விரதம் இருந்து வழிபட்டால், வருடம் முழுவதும் அமாவாசை விரதம் இருந்த பலன் கிடைத்து விடும் என்பார்கள்.
இந்த நாளில் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன் எனப்படும் தர்ப்பணம், படையல் போன்ற வழிபாடுகளை செய்தால் பித்ரு சாபம், பித்ரு தோஷம் ஆகியவை நீங்கும். இன்று நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை நம்முடைய முன்னோர்கள் நேரடியாக ஏற்பதாக சொல்லப்படுவதால் இந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பதால் நம்முடைய பாவங்கள் மட்டுமின்றி நம்முடைய ஏழு தலைமுறை முன்னோர்கள் செய்த பாவமும் நீங்கி, அவர்கள் மேல் உலகில் நற்கதி அடைவதாக ஐதீகம்.இப்படிப்பட்ட இந்த நன்னாளில் புனித தீர்த்தங்களில் மக்கள் நீராடி வழிபாடு செய்து வழக்கம்
இதன் காரணமாக ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் பக்தர்கள் வந்து நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வார்கள். அதன்பாடி இன்று தை அமாவாசை என்பதால் ஏராளமானோர் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே அக்னி தீர்த்தக் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
மேலும், கன்னியாகுமரி,காவிரி கரை, வைகை கரை,திருச்செந்தூர், நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை, பூம்புகார், திருவையாறு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர் பொதுமக்கள்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}