பிறந்த நாளன்று.. கேக் சாப்பிட்ட.. 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி.. பதறிப் போன பஞ்சாப்

Mar 31, 2024,09:09 AM IST

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 10 வயது சிறுமி, பிறந்த நாளன்று கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


பாட்டியாலாவில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் வைத்து கேக் வெட்டி சாப்பிட்ட நிலையில்,  அந்த சிறுமியின் குடும்பத்தினரும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 


மரணமடைந்த சிறுமியின் பெயர் மான்வி. கடந்த வாரம் இவர் தனது 10வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் வீட்டில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இரவு 7 மணிக்கு மான்வி கேக் வெட்டியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் குடும்பத்தினர் அனைவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.




மான்வி, அவரது சகோதரி ஆகியோருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதில் மான்விக்கு வாயெல்லாம் வறண்டு போய் தண்ணீர் கேட்டு கதறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவர் மயங்கி விட்டார். பதறிப் போன குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.


அடுத்த நாள் காலையில், மான்வி மரணமடைந்தார். மற்றவர்களுக்கு ஆபத்து இல்லை. இதுகுறித்து மான்வியின் தாத்தா ஹர்பன் லால் கூறுகையில்,  கேக் கன்ஹா என்ற பேக்கரியிலிருந்து இந்த கேக்கை வாங்கினோம். அதில் ஏதோ விஷப் பொருள் கலந்திருக்கிறது. அதனால்தான் மான்வியின் உயிர் பறி போய் விட்டது என்று கூறினார். 


இந்த சம்பவம் பாட்டியாலாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பேக்கரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கேக் சாம்பிளை சோதனைக்கு அனுப்பியுள்ளனர். விரிவான அறிக்கைக்காக தற்போது போலீஸார் காத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்