சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் படிப்படியாக உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வந்தது. இதனால் மக்கள் குஷியில் இருந்து வந்தனர். இதற்கிடையே தென்மேற்குப் பருவமழையும் முன்கூட்டியே ஆரம்பமானது. அதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நாளை புயலாக உருவாகிறது.
இதனால் தமிழக முழுவதும் பரவலாக கன முதல் மிக கனமழை வரையிலும், ஒரு சில இடங்களில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பொழிவும் இருந்து வந்தது. மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் தமிழ்நாட்டில் மழை அளவு குறைந்து வெப்பம் படிப்படியாக உயரும் என ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் வெயிலா என மக்கள் அயர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். சென்னையை பொறுத்தவரை 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று கனமழை:
நீலகிரி, கோவை,திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}