வாஷிங்டன்: அமெரிக்காவில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் கிட்டத்தட்ட 12.5 லட்சம் தெலுங்கு பேசுவோர் இருப்பதாக புள்ளிவிவரத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கவரும் நாடாக அமெரிக்கா இன்றும் திகழ்கிறது. படிப்பதற்காகத்தான் பலரும் அமெரிக்காவை விரும்புகிறார்கள். படித்த பின்னர் பலர் இங்கேயே வேலை பார்க்க விரும்புகின்றனர். அப்படியே இங்கேயே செட்டிலாக விரும்புவோரும் அதிகரித்து வருகின்றனர்.
பல்வேறு நாட்டவர்கள் போல இந்தியர்களும் கூட பெருமளவில் அமெரிக்காவில் படிக்கவும், வேலை பார்க்கவும், செட்டிலாகவும் விரும்புகின்றனர். இந்த எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்தபடிதான் உள்ளதே தவிர குறைந்தபாடில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் தெலுங்கு பேசுவோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளதாம்.
அதிகம் பேசப்படும் இந்திய மொழிகள்
அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது தெலுங்கு. இதற்கு முன்பு இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகள் டாப் 10க்குள் உள்ளன. தெலுங்குக்கு அடுத்து அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளாக பெங்காலி, தமிழ், பஞ்சாபி ஆகியவை டாப் 25க்குள் உள்ளன. மலையாளம், கன்னடம் ஆகியவை 40 இடங்களைத் தாண்டி உள்ளன.
அமெரிக்காவிலேயே கலிபோர்னியாவில்தான் அதிக அளவிலான தெலுங்கு பேசுவோர் உள்ளனர். இங்கு மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் உள்ளனராம். டெக்சாஸில் 1.5 லட்சம், நியூ ஜெர்சியில் 1.1 லட்சம், இல்லினாய்ஸில் 83,000, விர்ஜீனியாவில் 78,000, ஜார்ஜியாவில் 52,000 தெலுங்கு பேசுவோர் உள்ளனராம். வருடா வருடம் அமெரிக்காவுக்கு கிட்டத்தட்ட 60,000 முதல் 70,000 தெலுங்கு பேசும் மாணவர்கள் படிப்பதற்காக வருகிறார்கள்.
தடுக்கி விழுந்தால் தெலுங்கர்தான்
அமெரிக்காவைப் பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பத்துறை, நிதித்துறை ஆகியவற்றில்தான் அதிக அளவிலான தெலுங்கு பேசுவோர் வேலை பார்க்கிறார்கள். அமெரிக்காவில் தடுக்கி விழுந்தால் யாராவது ஒரு தெலுங்கர் மீதுதான் விழ வேண்டும். அந்த அளவுக்கு தெலுங்கு பேசுவோர் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டல்லாஸைச் சேர்ந்த வினய் என்பவர் கூறுகையில், நான் கடந்த ஆண்டுதான் இங்கு வந்தேன். எனக்கு ஆந்திராவில் இருப்பது போலத்தான் ஃபீல் ஆகிறது. காரணம், இங்கு எனது அலுவலகம் முதல் நான் தங்கியிருக்கும் இடம் வரை, தெருக்களில், மால்களில் என எங்கு பார்த்தாலும் தெலுங்கர்கள்தான் அதிகம் காணப்படுகின்றனர். சொந்த மாநிலத்தில் இருப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது. அமெரிக்காவில் இருப்பது போலவே தெரியவில்லை என்றார்.
அரபு நாடுகளுக்கு மலையாளிகள் போல, அமெரிக்காவில் தெலுங்கர்கள் மயமாகி விட்டது.. பேசாமல் இந்திய மொழிக்காரர்களுக்காகவே அமெரிக்காவில் ஒரு தனி மாகாணம் அமைச்சுடலாம் போலயே!
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}