- ஸ்வர்ணலட்சுமி
U - Uthsavam
G - Gowravam
A - Anandam
D - Danam
I - Ishwaryam
மார்ச் 30, 2025 அன்று யுகாதி அல்லது உகாதி- தெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ,கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் யுகாதி ஒரு இந்து பண்டிகை ஆகும். தெலுங்கு மக்கள் மட்டுமல்லாமல் கன்னட மக்களுக்கும் கூட உகாதிதான் புத்தாண்டு தினமாகும்.
உகாதி என்றால் என்ன?
"உகா "என்றால்" யுகம்" அல்லது கால தொடக்கம். உகாதி என்பது யுகாதி என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். இதில் "யுகம்" என்பது காலச்சக்கரத்தை குறிக்கிறது ."ஆதி "என்பது தொடக்கத்தை அதாவது ஆரம்பத்தை குறிக்கிறது. எனவே, இது ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. இது சந்திரமானபடி புத்தாண்டு ஆகும் .இந்த நாளில் பெருமழை காலம் முடிந்து வசந்தகால தொடக்கத்தை குறிக்கிறது.
யுகாதி என்பது தெலுங்கு புத்தாண்டு சம்வத்சராதி என்றும் அழைக்கப்படுகிறது.
இது இந்து நாட்காட்டியின் படி ஆண்டின் தொடக்கத்தை குறிக்கும். சைத்ர மாதத்தின் முதல் நாள் பொதுவாக க்ரிகோரியன் நாட்காட்டியின் இவ்வருடம் மார்ச் 30ம் தேதி ஞாயிறு அன்று வருகிறது.
யுகாதி பிற மாநிலங்களில் கொண்டாடப்படும் விதம்:
மகாராஷ்டிரா ,மத்திய பிரதேசம் மாநிலங்களில் இதனை குடிப்பட்வா என்று குறிப்பிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் நாள் அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
கேரளத்தில் -விசு என்றும் பஞ்சாபில் -பைசாக்கி என்றும் மேற்கு வங்கத்தில்- பொயிலாபோசாக் என்றும் மணிப்பூரில் -செய் சபா என்றும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
வழிபாடு முறைகள்:
* வீடுகளை தூய்மை செய்து பல வண்ண கோலமிட்டு மாங்கனி இலை தோரணம் கட்டி வீடும் முழுதும் அலங்கரிக்கப்படும்.
* விஷ்ணு விற்கும் லட்சுமி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
யுகாதி பச்சடி:
வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை குறிக்க இந்த பச்சடியில் ஆறு வகையான சுவைகளை கொண்ட ஒரு சிறப்பான உணவு ஆகும். இந்த பச்சடியில் வேப்பம்பூ, மாங்காய் , வெல்லம், புளிக்கரைசல், உப்பு, மிளகு சேர்க்கப்பட்டு ஒரு பானமாக தயார் செய்யப்படுகிறது. இது வாழ்க்கையின் ஆறு பரிமாணங்களை :(இன்பம், துன்பம் ,பயம், வெற்றி, தோல்வி, வியப்பு) குறிக்கிறது
1. வெல்லம் - இனிப்பு சுவை -மகிழ்ச்சி.
2. புளிக்கரைசல் -புளிப்பு சுவை- விரும்பத்தகாத வெறுப்பு.
3. உப்பு - உவர்ப்பு சுவை- தெரியாத கட்டத்தின் பயம்.
4. காரம் - மிளகு- கோபம்.
5. மாங்காய்- துவர்ப்பு- ஆச்சரியம், வியப்பு.
6.வேப்பம்பூ- கசப்பு - துன்பம்.
* மாலையில் கோவில்களில் புதிய ஆண்டின் எதிர்கால பலன்களை பஞ்சாங்கம் மூலம் அறிந்து கொள்வார்கள் .பஞ்சாங்கவாசிப்பு நடைபெறும். பழையவற்றை விடுத்து புதிய எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் உடன் வாழ துவங்குதல். உகாதி என்பது புது தொடக்கத்திற்கான நாள் என்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் புதிய ஆடைகள் அணிந்து, உறவினர்களுடன் அவரவர் குடும்ப உறுப்பினர்களுடன், சேர்ந்து கொண்டாடும் பண்டிகை ஆகும்.
மொழியால் வேறுபட்டிருந்தாலும் தமிழக மக்களோடு இரண்டறக் கலந்து இன்ப துன்பங்களில் பங்கெடுத்து ,சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வரும் நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு இடையேயான இந்த ஒற்றுமை உணர்வும், நட்புணர்வும் இப்புத்தாண்டில் வலுப்பெற வேண்டுகிறோம். தெலுங்கு வருட பிறப்பான யுகாதி திருநாளை உவகையோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் அனைத்து மக்களுக்கும் யுகாதி திருநாள் வாழ்த்துக்கள்.
எங்களுடன் இணைந்திருக்கும் அனைத்து தென் தமிழ் வாசகர்களுக்கு மற்றும் அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துக்கள். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
கொடைக்கானலுக்கு செல்லும்.. வாகனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்.. இன்று நள்ளிரவு முதல் அமல்..!
மராத்தி பேசாவிட்டால் பளார்னு அறையுங்கள்.. தமிழ்நாட்டின் தைரியம் நமக்கு வேண்டும்.. ராஜ் தாக்கரே
ஏப்,6ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டம்: தமிழக காங், தலைவர் செல்வபெருந்தகை
தோனி கடைசி ஓவர்களில் களம் இறங்குவது ஏன் தெரியுமா?.. பிளமிங் சொல்லும் காரணம் இதுதான்!
கிப்லி டிரெண்டில் கை கோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி.. அசத்தல் புகைப்படங்களை ஷேர் செய்து மகிழ்ச்சி!
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? : டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
விஜய் எந்த தொகுதியில் நின்னாலும் அவரை எதிர்த்து நானும் நிற்க தயார்: பவர் ஸ்டார் சீனீவாசன்!
Attn passengers: ஏப்ரல் 1 முதல் 30 வரை.. தென்காசி டூ செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் சேவை ரத்து..!
நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே சூர்யா காம்போவில்.. சர்தார் 2 டீசர் வெளியீடு.. ரசிகர்கள் வரவேற்பு!
{{comments.comment}}