ஹைதராபாத்: ஒரே நேரத்தில் இரண்டு பெரிய தலைகளை சம்பவம் செய்து அதிர வைத்துள்ளார் பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட ரமண ரெட்டி.. இதன் மூலம் தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளார் ரெட்டி.
தெலங்கானா சட்டசபைத் தேர்தல் பல வகைகளிலும் வரலாறு படைத்துள்ளது. இதுவரை அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்த பிஆர்எஸ் கட்சியை காங்கிரஸ் வீழ்த்தி அசத்தியுள்ளது. பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் வசம் இருந்த வந்த கோட்டையை ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் வீழ்த்தி வீசியுள்ளது. ஆனால் அந்த கேசிஆரையும், ரேவந்த் ரெட்டியையும் சேர்த்து வைத்து வீட்டுக்கு அனுப்பி அலேக்கான தோல்வியைக் கொடுத்து அசத்தியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி.
யார் இந்த ரமண ரெட்டி என்று அத்தனை பேரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார் இந்த வெற்றியின் மூலம். ஒரு தெலுங்குப் படத்திற்கு நிகரான சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
காமாரெட்டி தொகுதியில்தான் கேசிஆர் போட்டியிட்டார். அதே தொகுதியில் அவரை எதிர்த்து நின்றார் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் அனுமுலா ரெட்டி. இவர்களுக்கு எதிராக பாஜக சார்பில் களம் இறக்கப்பட்டவர்தான் கட்டிப்பள்ளி வெங்கட ரமண ரெட்டி.
இரு பெரும் தலைவர்களுக்கு மத்தியில் வெங்கட ரமண ரெட்டி எப்படி ஜெயிப்பார் என்று பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இருவரையும் ஜஸ்ட் லைக் தட் வீழ்த்தி விட்டு வெற்றிக் கனியைப் பறித்துள்ளார் வெங்கட ரமண ரெட்டி.
வெற்றி பெற்ற வெங்கட ரமண ரெட்டி 66652 வாக்குகளைப் பெற்று வென்றார். அடுத்த இடத்தைப் பிடித்த கேசிஆர் 59911 வாக்குகளைப் பெற்று 2வது இடத்தைப் பிடித்தார். 3வது இடத்தைப் பிடித்த ரேவந்த் ரெட்டி 54915 வாக்குகளைப் பெற்று வீழ்ச்சி அடைந்தார். இவர்களைத் தவிர மற்ற 6 வேட்பாளர்களும் டெபாசிட்டைப் பறி கொடுத்தனர்.
வெங்கட ரமண ரெட்டி, தெலங்கானாவின் இரு பெரும் தலைகளை வீழ்த்தி சம்பவம் செய்தது பாஜகவினரை மொத்தமாக உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!
வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!
மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!
{{comments.comment}}