ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
தெலங்கானா தனி மாநிலமாகிய பின்னர் நடக்கும் 3வது சட்டசபை தேர்தலாகும் இது. இதுவரை நடந்த 2 தேர்தல்களிலும் டிஆர்எஸ் எனப்படும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிதான் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்த முறை ஹாட்ரிக் வெற்றிக்கு அக்கட்சி குறி வைத்துள்ளது.
இந்த நிலையில் இன்று அங்கு தேர்தல் நடந்தது. தெலங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 119 தொகுதிகளில் 2290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு பல முனை போட்டி நிலவி வருவதால் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்க வருகின்றனர். இதனால் இத்தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் வெகுவாக திரண்டு வந்து வாக்களித்தனர். நடிகர் அல்லு அர்ஜூன் ஐதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் அமைக்கப்பட் வாக்கு சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர். தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்துள்ளார். இயக்குனர் ராஜமவுலி, மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர் வெங்கடேஷ், நடிகர் ராணா உள்ளிட்டவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். நடிகர் ஜெகபதி பாபு பிலிம் நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார். நடிகர் விஜய் தேவரகொண்டா ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் வாக்களித்தார்.
அங்கு கடும் குளிர் நிலவி வருவதையும் பொருட்படுத்தாது பிரபலங்கள் காலை முதலே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}