இது ஒரு "அடிதடி" நியூஸ்.. கூடவே "கடி" மேட்டரும் கூட.. நடந்தது தெலங்கானா மாநிலத்தின் "அடி"லாபாத்தில்!

Dec 23, 2023,05:44 PM IST

ஹைதராபாத்:  தெலங்கானா மாநிலத்தில், கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறின்போது இளைஞர் ஒருவர், கண்டக்டர் கன்னத்தைப் பிடித்து நறுக்கென கடித்து வைத்து விட்டார். இதனால் கன்னம் வீங்கி, வலி தாங்க முடியாமல் கண்டக்டர் கதறினார்.


விடிஞ்சு எழுந்தா எத்தனையோ பிரச்சனைகள் தினமும் நாம் பார்க்கிறோம். ஒவ்வொன்றும் புது விதமாத்தான் இருக்கு.. இப்படியும் நடக்குது பாருங்களேன் என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு பல பஞ்சாயத்துக்கள் இருந்தாலும்.. இப்படியுமா என்று நம்மை திகிலடிக்க வைக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது. என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று கூட தெரியாமல் ஏடாகூடமாக நடக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது திகிலாகத்தான் இருக்கிறது. அப்படி தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.


இது ஒரு அடிதடி மேட்டர்.. கூடவே "கடி" மேட்டரும் கூட.. நடந்தது தெலங்கானா மாநிலத்தின் "அடி"லாபாத்தில்!




தெலங்கானா மாநிலம்,  அடிலாபாத்தைச் சேர்ந்தவர் அசிம் கான். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து அடிலாபாத் செல்லும் தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணித்துள்ளார். டிக்கெட் எடுத்த பிறகு பார்த்தால் உட்கார இடம் இல்லை. இதனால் நடத்துனருடன்  தகராறில் ஈடுபட்டார். இதனால், பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டது. நடத்துனருக்கும் ஆசிம் கானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்கு வாதத்தினால் நடந்துனர் ஆசிமிடம் பணத்தை திருப்பி கொடுத்து பேருந்தில் இருந்து கீழே இறங்க கூறியுள்ளார். 


இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிம் கான் பேருந்தில் இருந்த நடத்துனரின் கன்னத்தைப் பிடித்து பலமாக கடித்துள்ளார். இதனால் வலி தாங்காமல் அலறினார் கண்டக்டர். அவரது கண்ணுக்குக் கீழே நன்றாக பல் படும் அளவுக்கு கடித்து வைத்திருந்தார் அசிம் கான். இதனால்  பேருந்து நிறுத்தப்பட்டது. அருகில் இருந்த பயணி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Rains.. சென்னையில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

news

தமிழ்நாட்டை மெல்ல மெல்ல நெருங்கி வரும் காற்றழுத்தம்.. இன்றும் நாளையும் அதி கன மழைக்கு வாய்ப்பு!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 26, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Red Alert: 3 மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறு நாள் 2.. ரெட் அலர்ட்.. மிக மிக கன மழை பெய்யும்!

news

Rain Alert: டெல்டா மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு மிக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

news

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேற வேலை இல்லை.. முதல்வர் மு.க. ஸ்டாலின்

news

அல்லு அர்ஜூனின் புஷ்பா 2.. டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை.. அமெரிக்காவில் அதிரடி சேல்ஸ்

news

பிறந்த நாளின்போது.. பிளக்ஸ் பேனர்கள், பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்

news

ராமதாஸ் குறித்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்