டீம்  ஓபிஎஸ்ஸுக்கு இதே வேலையாப் போச்சு.. கர்நாடக தேர்தலிலிருந்து விலகல்!

Apr 24, 2023,11:21 AM IST
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து விட்டு பின்னர் விலகினார்கள். இப்போது கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து விட்டு அதிலிருந்தும் விலகியுள்ளது ஓபிஎஸ் அணி.

ஓபிஎஸ் அணி இப்படி அடுத்தடுத்து சறுக்கலான முடிவுகளை எடுப்பதன் மூலம் அதிமுகவினரின் கேலிக் கூத்துக்குள்ளாகியுள்ளனர். ஒரு தெளிவான, உறுதியான முடிவு எடுக்க முடியாத அளவுக்கு ஓபிஎஸ் அணி வலுவிழந்து விட்டதா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் முன் வைக்கப்படுகிறது.



அதிமுக பிளவுபட்டு எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக மாறியது. இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே சட்டப் போராட்டங்கள் தொடங்கின. இதில் அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி அணி வென்று வந்தது. முக்கிய வெற்றியை சமீபத்தில் பெற்ற நிலையில் அதிரடியாக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி அதில் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டது.

ஆனாலும் சட்டப் போராட்டங்கள் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிமுக என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலானதுதான்.அவர்தான் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையாகவும் இருக்கிறார். சட்டத்தின் பார்வையில் இதுதான் செல்லுபடியாகும்.

இந்த நிலையில் கர்நாடக  சட்டசபைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என்று ஓபிஎஸ் அணி அறிவித்திருந்தது. ஆனால் நாங்கள் போட்டியிட மாட்டோம், பாஜகவை ஆதரிப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அறிவித்தது. ஆனால் திடீரென எடப்பாடி தரப்பில் அன்பரசன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று அதிமுக தரப்பு அறிவித்தது.

மறுபக்கம் பெங்களூரில்  புலிகேசி நகர், காந்தி நகர் என இரு தொகுதிகளிலும் கோலார் தங்கவயல் தொகுதியிலும் ஓபிஎஸ் வேட்பாளர்களை அறிவித்தார்.  இதில் புலிகேசி நகரில் ஓபிஎஸ் அணி வேட்பு மனு தள்ளுபடியாகி விட்டது.  காந்திநகர், கோலார் தங்கவயல் தொகுதிகளில் வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதை விட ஆச்சரியமாக, காந்திநகர் ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. 

உடனடியாக கர்நாடக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி, நாங்களே அதிமுக. எங்களது வேட்பாளர்களைத் தவிர வேறுயாருக்கும் இரட்டை இலை சின்னத்தைத் தரக் கூடாது என்று எதிர்ப்பைப் பதிவு செய்தார்.  இப்படி அனல் பறக்க குழப்பங்கள் விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில் தனது வேட்பாளர்களைத் திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

அதிமுக எடப்பாடி பழனிச்சாமிக்கே சொந்தம் என்று தீர்ப்பு வந்து விட்ட பின்னர் அதிமுகவின் அடையாளங்களை பயன்படுத்தினால் பெரும் சட்டச் சிக்கலில் சிக்க நேரிடும் என்பதால்தான் ஓபிஎஸ் தரப்பு பின்வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இப்படித்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலிலும் கடைசி நேரத்தில் பின்வாங்கினார்கள். இப்போதும் பல்டி அடித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்