இலங்கை டூருக்கான இந்திய அணி தேர்வு.. ரசிகர்கள் குழப்பம் + ஷாக்.. கெளதம் கம்பீர் கையில் டேட்டா!

Jul 20, 2024,05:48 PM IST

மும்பை:   இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியின் வீரர்கள் தேர்வு ரசிகர்களிடையே பலவிதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முழுக்க முழுக்க டேட்டாக்களின் அடிப்படையிலையே வீரர்களுக்கு ஓகே சொல்லியுள்ளாராம் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர்.


டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஹர்டிக் பாண்ட்யா மற்றும் சூர்ய குமார் யாதவ் அதி முக்கியமானவர்கள். அந்த இரண்டு பேரும்  ஒரு நாள் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. மாறாக டி20 அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளனர். சூர்யகுமார் யாதவ் டி20 அணிக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 


சூர்யகுமார் யாதவுக்கு டி20 அணியில் மட்டும் இடம் கிடைக்க காரணம் - அந்த பார்மட்டில் அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளையாடியதால் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம். அதேசமயம், கடந்த 2023ல் நடந்த ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரில் அவர் சரியாக விளையாடாமல் சொதப்பியதால் அவருக்கு ஒரு நாள் அணியில் இடம் தரப்படவில்லையாம்.




கம்பீரைப் பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் டி20 பார்மட்டுக்கு மிகச் சிறந்த வீரராக இருக்கலாம். ஆனால், ஒரு நாள் போட்டிக்கு அவர் சரிப்பட மாட்டார் என்பதாகும். இதனால்தான் அவருக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைக்கவில்லையாம். அது ஒரு வகையில் உண்மையும் கூட. 37 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சூர்ய குமார் யாதவின் பேட்டிங் சராசரி வெறும் 25.76 மட்டுமே. இது நீண்ட காலமாக சர்ச்சையாகவும் இருந்து வருகிறது. இதே கருத்தைத்தான் தற்போது கம்பீரும் கையில் எடுத்து ஒரு நாள் அணியிலிருந்து அவரை விலக்கியுள்ளார்.


மேலும் இளம் திறமைகளுக்கு கூடுதல் வாய்ப்பளிக்கும் விதமாகவும் வீரர்கள் தேர்வில் தனது நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக வைத்துள்ளாராம் கம்பீர். இதனால்தான் டி20 அணியில் பல சீனியர்களுக்கு இடம் தரப்படவில்லை. விராட் கோலி , ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர்  டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்களுக்கு சரியான மாற்று வீரர்களை அடையாளம் காண இந்த தொடரை பயன்படுத்த கம்பீர் விரும்பியுள்ளார். இதன் விளைவாக ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், சஞ்சு சாம்சன் போன்றோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம், கேப்டன் பொறுப்பை ஹர்டிக் பாண்ட்யாவிடம் தரவில்லை. அதை சூர்ய குமார்யாதவிடம் கொடுத்துள்ளனர்.


வாஷிங்டன் சுந்தர், அக்ஸார் படேலுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் அவர்களுக்குப் பிரகாசமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். சுப்மன் கில்லுக்கு இரு பார்மட்டிலும் துணை கேப்டன் பொறுப்பு கிடைத்துள்ளது. அதேபோல சிவம் துபே இரு பார்மட்டிலும் இடம் பெற்றுள்ளார்.


இந்தியா- இலங்கை இடையே 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் டி20 தொடர் இடம் பெறும். முதல் போட்டி  ஜூலை 27ம் தேதி நடைபெறவுள்ளது. 2வது போட்டி 28ம் தேதியும், 3வது போட்டி 30ம் தேதியும் நடைபெறும். அதைத் தொடர்ந்து முதல் ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 2ம் தேதியும், 4ம் தேதி 2வது ஒரு நாள் போட்டியும், 7ம் தேதி மூன்றாவது ஒரு நாள் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் போட்டிகளும் பகல் இரவுப் போட்டியாக நடைபெறும். ஒரு நாள் போட்டிகள் கொழும்பிலும், டி20 போட்டிகள் பல்லகலேவிலும் நடைபெறும். 


டி20 அணி:


சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷாப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்டிக் பாண்ட்யா, சிவம் துபே, அக்ஸார் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகம்மது சிராஜ்.


ஒரு நாள் அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷாப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஸார் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்