இ.ந்.தி.யா கூட்டணியில் மீண்டும் உரசல்.. காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே மோதல்!

Aug 05, 2023,10:31 AM IST
டெல்லி : எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள இ-ந்-தி-யா கூட்டணி ஆரம்பித்த 2 மாதங்களுக்குள் புதிய சிக்கலைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே பூசல் வெடித்துள்ளது.

பாஜக.,வை எதிர்ப்பதற்காக தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இ-ந்-தி-யா என்ற பெயரில் கூட்டணியை உருக்கி உள்ளன. டில்லி அவசர சட்ட விவகாரம் தொடர்பாக ஜூன் மாதம் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்திலேயே காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே முட்டிக் கொண்டது. பிறகு மம்தா பானர்ஜி உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.



நீண்ட யோசனை, இழுபறிக்கு பிறகு தான் டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆம்ஆத்மிக்கு ஆதரவு தர காங்கிரஸ் ஒப்புக் கொண்டது. இந்நிலையில் தற்போது மொகல்லா கிளினிக் விவகாரத்தில் இரு கட்சிகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

மொகல்லா கிளினிக் எனப்படும் ஆரம்ப சுகாதார மையங்களில் மக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை, சிகிச்சை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இது டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கி வருகிறது. சமீபத்தில் டில்லி சென்ற கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், டில்லியில் உள்ள மொகல்லா கிளினிக்குகளை பார்வையிட்டார். 

இந்த போட்டோக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி மொகல்லா கிளினிக்கை பார்வையிட வந்த கர்நாடக அமைச்சரை வரவேற்கிறேன். இரு அரசுகளும் ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்றுக் கொள்ள வேண்டும். கர்நாடகா அரசிடம் இருந்து டில்லியும் கற்றுக் கொள்ளும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் டில்லி சென்று திரும்பிய கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், சுகாதார திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் டில்லி மொகல்லா கிளினிக்வை பார்வையிட சென்றிருந்தேன். ஆனால் அது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. இதை விட அதிகமான வசதிகள் கர்நாடகாவில் நாங்கள் மக்களுக்காக செய்திருக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆம்ஆத்மி - காங்கிரஸ் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே மம்தா பானர்ஜி, டில்லி அவசர சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் குறித்து அமித்ஷா பேசியது சரி தான் என பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஆம்ஆத்மி -காங்கிரஸ் மோதல் வேறு. இதனால் இ-ந்-தி-யா., கூட்டணியே உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு வரையாவது தாங்குமா என சோஷியல் மீடியாவில் பலர் கலாய்த்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்