அன்று "டீச்சிங்" ஒரு மகானுபவம்.. இன்றோ அது சுகானுபவம்..!

Aug 03, 2023,04:48 PM IST
- மீனா

டீச்சர்... ! 

ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத வார்த்தைதான் இந்த "டீச்சர்"

ஹாய் டீச்சர் வந்துட்டாங்க..  இன்னைக்கு நம்ம டீச்சர் வரலையா,  அடுத்த பீரியடு நீங்களே எடுங்க டீச்சர், நாளைக்கு சீக்கிரமாவே பள்ளிக்கு சென்று இந்த பரிசை டீச்சருக்கு கொடுக்கணும்.. இப்படி ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும்.. ஓயாமல் ஒலித்து  கொண்டிருப்பது "டீச்சர்" என்ற ஒற்றை வார்த்தை தான். 

யாரிடமிருந்து இந்த மாதிரி வார்த்தைகள் வந்திருக்கும் என்று உங்களுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும். வேற யாரு.. மாணவர்களிடம் இருந்து தானே வந்திருக்கும் என்று நீங்கள்  நினைப்பது சரிதான். ஆனால் நாமும் அந்த மாணவர்களின் கூட்டத்தில் ஒருவராக ஒரு காலத்தில் இருந்தவர்கள்தானே.. ஆமாங்க அது எப்படி மறக்க முடியும், என்று மனதின் பசுமையான நினைவுகளை அசை போட ஆரம்பித்து விட்டீர்களா. என்னங்க உங்க நினைவுகளின் ரேடாரை தூண்டி விட்டுட்டேன் என்று நினைக்கிறேன். 



இன்ஸ்டாகிராமில் ஒரு டீச்சரைக் காண நேர்ந்தது. அவரது பெயர் ஸ்ரீபிரதா முரளிகிருஷ்ணன்.. ரொம்ப ஜாலியாக இருக்கிறார். நிறைய ரீல்ஸ் போடுகிறார்.  அதேசமயம் வகுப்பில் அவர் ஒரு நல்ல ஆசிரியையாகவும் இருக்கிறார். அவரைப் பற்றி பாராட்டுபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிந்றனர். ஆனால் அதை அவர் டோன்ட் கேர் என்று கடந்து செல்கிறார். நான் வகுப்புக்குள் நல்லதொரு ஆசிரியை.. வெளியில் நான் வேற லெவல் என்பது அவரது விளக்கமாக உள்ளது. அதைப் பார்த்தபோது நமக்கு நமது பழைய ஆசிரியர்கள் நினைவுக்கு வந்தார்கள்.

அது ஒரு அழகிய கனாக்காலம் என்று பாட்டு பாடி மனம்  குதுகலமாக துள்ளிக் குதிக்கிற சத்தம் எங்களுக்கும் கேட்குதே. உங்கள் முகத்தின் சந்தோஷத்தை பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியை எங்களாலும் உணர முடியும். இதே மாதிரி தாங்க தன்  மாணவர்களின் மகிழ்ச்சியே ,என்னுடைய வளர்ச்சி என்றும், அவர்களின் வளர்ச்சியே, எங்கள் மகிழ்ச்சி என்றும், எத்தனையோ ஆசிரியர்கள் தன்னுடைய பணிகளை திறம் பட செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இத்தகைய டீச்சர்களை சந்திக்காமல் தன் மாணவர் பருவத்தை எவராலும்  கடந்து வந்திருக்கவே முடியாது. 



ஒரு காலத்தில் ஆசிரியர்களின் வாழ்க்கை என்பது மகானுபவமாக இருந்தது.. ஒவ்வொரு மாணவருக்கும் அவரவர் டீச்சர்தான் உலகமே.. அவர்களிடம்தான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டனர். எல்லாருக்குமே தனக்கு பிடித்தமான தன்னை புரிந்து கொண்ட ஒரு டீச்சர் கிடைப்பது என்பது ஒரு வரம் தான். இந்த மாதிரி டீச்சர்கள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருந்திருப்பாங்க. அப்பொழுதெல்லாம் நமக்கு பிடித்த ஹீரோயின்களில், நம்முடைய டீச்சர்கள் முதல் இடத்தில் எப்போதும் இருப்பார்கள். டீச்சர் என்றாலே பயம் கலந்த மரியாதை தான் அப்போதெல்லாம் இருந்தது. 

அவ்வளவாக தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் நம்முடைய டீச்சர் தான் நமக்கு கூகுள் மாதிரி. அவங்களுக்கு தான் எல்லாமே தெரியும் என்று எந்த ஒரு  சந்தேகத்தையும் கேட்டு தெளிவு பெற்று இருப்போம். நம்மளை நம்பி தான் பிள்ளைகளுடைய எதிர்காலம��� உண்டு என்று பல புத்தகங்களையும் புரட்டிப் பார்த்து நமக்கான பதில்களை திரட்டி வருவதில் அவர்கள் தான் முன்மாதிரியாக இருந்தார்கள். பள்ளி பாடத்தையும் தாண்டி வாழ்க்கை பாடத்தையும் அழகாக கற்றுக் கொடுப்பதில் பெரும் பங்கு இந்த டீச்சர்களுக்கு தான் இருக்கு. 

வருங்கால சமுதாயத்தை  வழி நடத்த வல்லமை படைத்தவங்க அவங்க தான். அவங்களுக்கு என்று தனி அடையாளம் என்று ஒன்றும் கிடையாது. ஆனால் அவங்களுக்கு பெரிய அடையாளமும், அங்கீகாரமாக இருப்பதும், அவர்களிடம் படித்த  மாணவர்களின் வளர்ச்சி தான். அன்றைய பெற்றோர்களும் தனக்கு அடுத்து தன் பிள்ளைகளை கண்டிக்கும் உரிமையை கொடுத்தது டீச்சர்களுக்கு தான். நல்லா  படிக்கலைனா முட்டிய பேத்திருங்க டீச்சர் என்று இந்த வசனத்தை கேட்காமல் இருந்தவர்கள் சில பேரு தான். 



இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் இந்த வார்த்தைகளை நம் பிள்ளைகள் கேட்டாலே பிடிக்க மாட்டேங்குது. நம்முடைய ஆசிரியர்களை  கூகுளாக பார்த்து ஆச்சரியப்பட்ட காலங்கள் போய் இன்று நம் பிள்ளைகளே 10 googleக்கு சமமாக தன்னுடைய அறிவை விரிவு படுத்தி ஆச்சரியப்படுத்துறாங்க. அன்றைய டீச்சிங் மகானுபவம் என்றால் இன்றைய டீச்சிங் சுகானுபவமாக மாறி நிற்கிறது. எளிதாக கற்றுக் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்து விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியும் அசராமல் வளர்ந்து கொண்டுதான் போகிறது. 

முன்பெல்லாம் டீச்சர்களிடம் ஹார்ட் ஒர்க் இருந்தது.. இன்று ஸ்மார்ட் ஒர்க்குக்கு மாறி விட்டனர். ஸ்மார்ட்டாக மட்டும்தான் பாடம் எடுக்க முடியும். காரணம் மாணவர்கள் படு ஸ்மார்ட்டாக உள்ளனர். அவர்களுக்குப் புரிய வைக்க அதிக சிரமம் தேவையில்லை. தேவையான அளவில் புகட்டும் திறமையை மட்டும் டீச்சர்கள் கைக் கொண்டால் போதுமானது.

இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியோடு நம் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சியும் அபாரமாக இருந்தால் நம்மை விட யார் அதிக சந்தோஷப்பட முடியும். ஆனால் இதில் உள்ள ஆபத்துகளை புரிய வைக்க தோழமையோடு தான் அவர்களை அணுக வேண்டி உள்ளது. முன்பு போல டீச்சர்கள் கடுமையாக இருக்க முடிவதில்லை. தோளோடு தோள் நின்று அவர்கள் வழியில் போய் எல்லாவற்றையும் கற்றுத் தர வேண்டியுள்ளது. மாணவர்களின் கல்வி திறமை மட்டுமல்லாமல்,அவர்களின் வேறு திறமைகளையும் கண்டுபிடித்து ஊக்குவித்து அந்தப் பாதையில் அவர்களைக் கொண்டு சென்றுதான் கல்வியைப் புகட்ட வேண்டியுள்ளது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற கூற்றை நாம் இன்று அனைவரும் கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மாற்றம் நல்லதாய் அமைந்தால் நல்லது தானே!. 

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்