கமகமன்னு மீன் வறுவல்.. இப்படியும் செய்யலாம்!

Feb 22, 2023,03:41 PM IST
- திவ்யா தங்கவேல்

மீன் வறுவல் பிடிக்காதவங்க யாராச்சும் இருக்க முடியுமா.. அப்படிப்பட்டவர்களுக்காவே இந்த கமகம டிப்ஸ்.. படிச்சுப் பாருங்க.. செஞ்சு சாப்பிடுங்க!



தேவையான பொருட்கள்:

மீன் துண்டுகள் -அரை கிலோ
மிளகாய் பொடி. -1 ஸ்பூன் 
மஞ்சள் பொடி. -1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் -6 
தேங்காய் -1/2 மூடி
சோம்பு. -1/2 ஸ்பூன் 
பூண்டு -6 பல் 
மிளகு. -1/2 ஸ்பூன்
கருவேப்பிலை -6 இலைகள்
லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்
உப்பு. - தேவையான அளவு.
எண்ணெய் - 1spoon 



செய்முறை:

1. முதலில் மீன் துண்டுகளை நன்கு கழுவி எடுத்து கொள்ள வேண்டும்..  ஒருமுறைக்கு இருமுறை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக அலசி எடூக்க வேண்டும்..

2.அலசிய மீன் துண்டுகளை எலுமிச்சம் பழச் சாறு, உப்பு தடவி வைத்து கொள்ள வேண்டும் 

3.இப்போது ஒரு மிக்ஸி  ஜாரில் தேங்காய் ( சிறிய மீன் என்றால் அறை மூடி தேங்காயில் பாதி எடுத்து கொள்ளலாம்), மிளகாய் பொடி, வெங்காயம், பூண்டு , மிளகு, சோம்பு, கருவேப்பிலை) இவை அனைத்தும் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேன்டும்.. தேங்காய் நன்கு அரைய வேண்டும். அது முக்கியம்.

4. அரைத்த விழுதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும். மசாலா நன்கு மீன் துண்டுகளில் பட வேண்டும்.

5 . தடவிய மீன்களை தட்டில் வைத்து ஒரு அரை மணி நேரம் ஃப்ரிட்ஜ் ல வைக்க வேண்டும் அல்லது ஃபேன் அடியில் வைக்க வேண்டும்.

6. அரை மணி நேரம் கழித்து ஒரு கடாயில் அல்லது தோசை கல் லில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி மீன்களை போட்டு எடுக்க வேண்டும். கருக விட கூடாது. அருகில் இருந்து 2 பக்கமும் நன்கு பொரித்து எடுக்கவும்..


குறிப்பு:

எங்கள் வீட்டில் குழந்தைகள் இருப்பதால் மசாலா நன்கு அரைத்து விடுவேன். நீங்கள் உங்களுக்கு ஏற்ற பதத்தில் அரைத்து கொள்ளலாம்.  மேலே சொன்ன பொருட்கள் காரம் உப்பு , உங்கள் ருசிக்கு ஏற்ற மாதிரி கூட குறைத்து போட்டுக்கொள்ளலாம்..

நான் குறைந்த அளவு எண்ணெய் விட்டு தான் மீன்களை போட்டு எடுப்பேன். இந்த தோடைக் கல் அல்லது தாவாவில் போட்டு வறுத்து எடுத்தால் சுவை அருமையாக இருக்கும். கடைசியில் மல்லிதழை, கருவேப்பிலை போட்டு எடுக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

news

மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்

news

காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டை கண்டித்து.. தீர்மானங்களை கொண்டு வாங்க பார்ப்போம்..எடப்பாடி பழனிச்சாமி சவால்

news

அமித்ஷா பிரஸ்மீட் மேடையில் திடீர் Change.. டிஜிட்டல் பேனரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெயர் நீக்கம்

news

திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்... புதிதாக திருச்சி சிவா நியமனம்!

news

அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக தலைவர்கள்.. தேமுதிகவுக்கு டைம் கொடுக்க மறுத்ததா பாஜக?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 11, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

கலக்கும் குட் பேட் அக்லி.. புஷ்பா பட இயக்குனர் சுகுமார் படத்தில் அஜித் நடிப்பாரா..?

அதிகம் பார்க்கும் செய்திகள்