கோதுமை மாவே இல்லாமல் சாஃப்ட்டான சப்பாத்தி... இப்படியும் ஹெல்த்தியா செஞ்சு சாப்பிடலாம்

Feb 10, 2025,06:07 PM IST

அரிசி உணவுகளான இட்லி, தோசைக்கு மாற்றாக நாம் எடுத்துக் கொள்வது சப்பாத்தி தான். ஆனால் பல பெண்களுக்கு சப்பாத்தி செய்வது என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். காரணம் அதற்கு மாவு பிசைய வேண்டும் என்பது தான். மாவு பிசைந்து, தேய்த்து, சுட்டு எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதை விட முக்கியமானது சப்பாத்தி மாவை சரியான பதத்திற்கு பிசைவது தான். பலருக்கும் இருக்கும் பிரச்சனையே சரியான முறையில் மாவு பிசைய தெரியாததால், சப்பாத்தி செய்ய போய் அது கடினமான ரொட்டியாக மாறி விடும். இதனால் சப்பாத்தி செய்வதையே பலரும் தவிர்ப்பதும் கூட உண்டு.


சப்பாத்தி சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பலருக்கும் கோதுமை மாவு உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாது. அதுவும் தற்போது வெயில் அதிகரிக்க துவங்கி விட்டதால் சிலருக்கு கோதுமை சப்பாத்தி சாப்பிட்டதும் வயிறு வலிக்க துவங்கி விடும். செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. இப்படி சப்பாத்தியால் பல விதமான பிரச்சனைகளை சந்திப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த ஹெல்தி சப்பாத்தியை டிரை பண்ணி பாருங்க. இந்த சப்பாத்தி செய்வதற்கு எந்த மாவும் தேவையில்லை. ஈஸியாக நான்கே பொருட்களை வைத்து சட்டென்று செய்து விடலாம்.  அதே சமயத்தில் ஹெத்தியாகவும், வயிற்றுக்கு நிறைவாகவும் இருக்கும்.  வாங்க இந்த சப்பாத்தி எப்படி செய்வது என பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :


ஆல்வள்ளி கிழங்கு - 3

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு


செய்முறை :




* ஆல்வள்ளிக்கிழங்கை தோல் நீக்கி விட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.


* கிழங்கு நன்றாக வெந்ததும் தனியாக ஒரு எடுத்து, அது ஆறியதும், இரண்டாக நறுக்கி, மையப்பகுதியில் உள்ள வேர் போன்ற பகுதியை நீக்கி விட வேண்டும்.


* பிறகு இந்த கிழங்கினை கட்டிகள் இல்லாமல் நன்கு உதிர்த்து விட வேண்டும்.  முடியவில்லை என்றால் கேரட் துருவுவது போல் துருவி எடுத்துக் கெள்ளலாம்.


* இந்த கிழங்கு துருவலுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூய், சீரகம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்தும் பிசைந்து கொள்ளலாம். அவ்வளவு தான் சப்பாத்தி மாவு ரெடி.


* இந்த மாவை ஊற வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடனடியாக கூட சப்பாத்தி செய்ய துவங்கி விடலாம்.


* வழக்கம் போல் சப்பாத்தி மனையில் வைத்து, மாவு தூவி சப்பாத்தியாக திரட்டி கொள்ள வேண்டும். ஓரங்களில் வெடிப்பு இருந்தால், ஒரு பெரிய சைஸ் மூடியை எடுத்து சப்பாத்தியை அழகாக ரவுண்ட் சேப்பிற்கு அச்சுகளாக எடுத்துக் கொள்ளலாம்.


* ஓரங்களில் இருக்கும் மாவை எடுத்து, மீதமுள்ள சப்பாத்தி மாவுடன் சேர்த்து பிசைந்து, சப்பாத்திகளாக திரட்டி, டவாவை சூடு செய்து சப்பாத்திகளாக சுட்டு எடுக்கலாம். 


* இந்த சப்பாத்தி நீண்ட நேரத்திற்கு சாஃப்டாக இருக்கும். 


ஆல்வள்ளி கிழங்கு நன்மைகள் :


* ஆல்வள்ளிக்கிழங்கை மரவள்ளி கிழங்கு என்றும் சொல்லுவார்கள். இது உடலுக்கு மிகவும் நல்லது. செரிமான பிரச்சனை இருப்பவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.


* இதில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.


* இதில் பொட்டாசியம் உள்ளதால் ரத்த அழுத்த அளவை சரியான முறையில் பாதுகாக்கும்.


* ஆல்வள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. 


* கால்சியம், இரும்பு சத்துக்கள், குறைந்த அளவே சோடியம் இருப்பதால் பிபி, சுகர் இருப்பவர்கள் கூட சாப்பிடலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்