Taste Atlas most hated foods 2025.. லிஸ்ட்டுல உப்புமா இல்லை.. பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டிக்கு 56வது இடம்!

Jan 18, 2025,08:06 PM IST

டெல்லி: டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட, உலகில் அதிகமாக வெறுக்கப்படும் 100 உணவுகள்  கொண்ட பட்டியலில், இந்திய உணவான பஞ்சாப் மக்களின் பிரதான உணவு மிஸ்ஸி ரொட்டி 56 ஆவது இடத்தை பிடித்துள்ளது. வட இந்தியர்களின் பாரம்பரிய உணவு எப்படி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


அதேசமயம், தமிழ்நாட்டில் பலரும் முகம் சுளிக்கும் ஆனால் அடிக்கடி வீடுகளில் செய்யப்படும் உப்புமாவுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது உப்புமா வெறியர்களுக்கு பெரும் ஆறுதலையும், சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.




உலக அளவில் உணவுகளின் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது டேஸ்ட் அட்லஸ் அமைப்பு. இந்த அமைப்பு, உணவு விமர்சகர்கள், சமையல் குறிப்புகள், உணவு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியலை வெளியிடுகிறது. அந்த வரிசையில் ஜனவரி 8, 2025 அன்று டேஸ்ட் அட்லஸ் 100 உணவுகள் கொண்ட உலகில் அதிகம் வெறுக்கப்படும் உணவுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.


இதில் இந்திய உணவான பஞ்சாப் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பாரம்பரிய உணவு, மிஸ்ஸி ரொட்டி 56வது இடத்தை பிடித்துள்ளது.


மிஸ்ஸி ரொட்டி என்பது முழு கோதுமை மாவு, உளுந்து மாவு, உப்பு, தண்ணீர், சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள், கேரம் விதை தூள், மஞ்சள், கொத்தமல்லி மற்றும் உலர்ந்த மாதுளை விதைகள் சேர்த்து தயாரிக்கப்படும் புளிப்பில்லாத  ரொட்டி வகையாகும். சமைத்தவுடன், இந்த ரொட்டி நெய்யில் டோஸ் செய்து பருப்புடன் (தால்) சேர்த்து பரிமாறப்படுகிறது.


மிகவும் மோசமான உணவு பட்டியலில் அயர்லாந்தின் பிளாட்பால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது ஒரு வகை பாலாடையில் செய்த உணவாகும். அடர்-பழுப்பு நிற பாலாடை, கம்பு மாவு, பார்லி மாவு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. 


இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ஜல்லீடு ஈல்ஸ், அமெரிக்காவின் பிராக் ஐ சாலட், ஸ்பெயினின் அகுலாஸ் ல கசுவா உள்ளிட்டவையும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!

news

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சூழல் மன்றங்கள்.. விரைவில் கொள்கை முடிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

No Uppuma.. பிரியாணியும் சிக்கன் பிரையும் வேணும்.. கலகலக்க வைத்த கேரள சிறுவன்.. அமைச்சர் சொன்ன பதில்

news

மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு நேற்று குறைந்த தங்கம் விலை.. மீண்டும் அதிரடியாக இன்று உயர்வு

news

Valentine's day: உங்களோட X-ஐ கடுப்பாக்கணுமா.. காத்திருக்கும் கரப்பான் பூச்சிகள்.. அமெரிக்காவில் கலகல

news

மதுரை.. இந்து முன்னணி போராட்ட அறிவிப்பு எதிரொலி.. போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருப்பரங்குன்றம்!

news

சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டேவுக்கு கை கொடுத்த ராபின் சர்மா..தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திமுக

news

Kaantha: எம்.ஆர். ராதா மாதிரி.. புதிய அவதாரத்தில் துல்கர் சல்மான்.. ராணாவுடன் இணைந்து தயாரிப்பு!

news

Ratha Saptami: ரதசப்தமி அன்று எருக்க இலை குளியல் ஏன்? எதற்காக ?

அதிகம் பார்க்கும் செய்திகள்