சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் மேற்பார்வையாளர் உள்பட அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 2000 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடைகளிலின் மூலம் நாள் ஒன்றிற்கு சாராசரியாக 100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில, தீபாவளி மற்றும் பண்டிகை நாட்களில் இந்த லாபம் மேலும் பல மடங்கு உயர்ந்து காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். அப்போது ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்கப்பட்டதாக புகார்கள் வந்தன. இந்த புகாரையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார்கள் வந்தால், குறிப்பிட்ட சேல்ஸ்மேன் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இந்தாண்டு கூடுதல் விலைக்கு மது விற்கப்பட்டால், சூப்பர்வைசர் உட்பட கடையில் பணிபுரியும் அனைவருமே பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக டாஸ்மார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூபாய் 10 அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் கடை பணிப்பாளர்கள் மீது பார்வை ஏழு காணும் நேர்முக கடிதத்தின் படி நடவடிக்கை எடுப்பதுடன், கடைப்பணியில் உள்ள அனைத்து கடை விற்பனையாளர்கள், கடை மேற்பார்வையாளர் உட்பட அனைவரும் கூட்டுப் பொறுப்பாக்கி கடை பணியாளர்களை உடனடியாக தற்காலிகப் பணி இடை நீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் தேர்வுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும் மாவட்ட மேலாளர்களும் சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் தவறாது கடைபிடிக்கும் மாறும் இச்சுற்றறிக்கையினை அனைத்து பாணியாளர்களுக்கும் சார்பு செய்து வழங்கி ஒப்புதல் பெற்று கோப்பில் பராமரிக்குமாறும் மேற்படி சுற்றறிக்கையினை சார்பு செய்து ஒப்புதல் பெற்றுக் கொண்டமைக்கு மாவட்ட மேலாளர்கள் அளவில் ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}