ஃபைன் வேணுமா இருக்கு.. கேஸ் வேணுமா இருக்கு.. வாரிசு தில் ராஜு ஸ்டைலுக்கு மாறிய போலீஸ்!

Jan 20, 2023,12:48 PM IST
சென்னை:  'வாரிசு' திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் ஸ்டைலில் தஞ்சாவூர் காவல்துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த "பொங்கல் பரிசு" தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 



நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி தற்போது வெற்றி நடைபோட்டுவருகிறது. 'வாரிசு' படம் வெளியாவதற்கு முன் படத்தின் ப்ரோமோஷன் முழுவீச்சில் நடைபெற்றது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விஜய்யின் குட்டி ஸ்டோரியுடன் மிகவும் கலகலப்பாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டுவிழாவில் படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜின் தெலுங்கு கலந்த தமிழ் பேச்சு அனைவரின் கனத்தை ஈர்த்தது என கூறலாம்.

தில்ராஜ் மேடையில் பேசும்போது, இந்தப் படத்தில் உங்களுக்கு டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபயிட் வேணுமா ஃபயிட் இருக்கு என மேடையில் படத்தின் ப்ரோமோஷனை வேற லெவலில் கொண்டு சென்றார்.

இவரின் இந்த கலகலப்பான பேச்சு இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை தட்டி எழுப்பியது. வேணுமா? இருக்கு! ஸ்டைலில் பல மீம்கள், ட்ரோல்கள் தில்ராஜ் மற்றும் வாரிசு படக்குழுவினரை சுற்றிவளைத்து.

இந்த நிலையில், தஞ்சாவூர் காவல்துறையும் இதே ஸ்டைலில் ஒரு டிவீட் போட்டு கலக்கியுள்ளது.  தஞ்சாவூர் காவல்துறையினர் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தில்ராஜின் வசனத்தை வைத்து போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், போதை ஆசாமிகளை எச்சரிக்கும் வகையிலும்  பொங்கல் பரிசு ஒன்றை கொடுத்துள்ளனர்.

"கேஸ் வேணுமா? கேஸ் இருக்கு!, பைன் வேணுமா? பைன் இருக்கு!, ஜெயில் வேணுமா? ஜெயில் இருக்கு! இறுதியாக வங்கி கணக்கை முடக்கணுமா? அதுவும் இருக்கு! என போதை ஆசாமிகளை எச்சரிக்கும் வகையில் தில்ராஜ் ஸ்டைலில் ட்விட்டர் பக்கத்தில் தஞ்சாவூர் காவல்துறையினர் போஸ்ட் செய்துள்ளனர்.

தற்போது இந்த ட்விட்டர் போஸ்ட் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி நிலையில் நெட்டிசன்கள் பலர் புதுசா இருக்கு சார்! புதுசா இருக்கு!, கிரியேட்டிவிட்டி வேற லெவல் என கமெண்ட் செய்தும், தஞ்சாவூர் காவல்துறையினரை பாராட்டியும் வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்