- மஞ்சுளா தேவி
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே 4 மற்றும் 7 ஆம் தேதி மின்கட்டணம் செலுத்த அறிவித்திருந்த நிலையில் வரும் 18ஆம் தேதி வரை அபராத தொகையின்றி மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக என தமிழக அரசு அறிவித்துள்ளது.
டிசம்பர் 3ம் தேதியன்று வங்கக்கடலில் ஏற்பட்ட மிச்சாங் புயல் காரணமாக, சென்னை ,திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,ஆகிய நான்கு மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்தது . இப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து தீவு போலானது . இதனால் மக்கள் மின்சாரம், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த மழை வெள்ளத்தில் பல்வேறு பொருட்கள் தண்ணீருக்கு இறையானது.பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்க தமிழக அரசு பல்வேறு மீட்பு நடவடிக்கைகளிலும், நிவாரண பணிகளிலும் ஈடுபட்டது.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடைசி தேதியாக 4.12.23 மற்றும் 7.12.23 ஆகிய தேதிகளில் அபராத தொகை இன்றி மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தி இருந்த நிலையில் , ஒரு சில பகுதிகளில் நிலைமையை இன்னும் சீரடையாமல் இருந்து வருகிறது.தற்போது பல்வேறு பகுதியை சேர்ந்த நலிவடைந்த மக்களால் மின்சார கட்டணத்தை கட்ட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த நான்கு மாவட்டங்களுக்கும் வரும் 18 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த அறிவிப்பு நான்கு மாவட்டங்களை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உட்பட அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
{{comments.comment}}