தமிழ்நாட்டில்.. இன்றும் நாளையும்.. பனியும் இருக்குமாம், வெயிலும் இருக்குமாம்.. வானிலை மையம் தகவல்!

Feb 20, 2025,05:56 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் காலை வேளையில் பனிமூட்டமும், பிற்பகலுக்குப் பிறகு வெயிலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.தற்போது ஒரு சில இடங்களில் காலை வேளைகளில் மிதமான பனியுடன் பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. முழுமையான கோடை காலமே இன்னும் தொடங்கவில்லை. ஆனால், இப்போதே மக்கள் பழ சாறு, இளநீர், தர்பூசணி, மோர் போன்றவற்றை குளுமையான பொருட்களை நாடிச் செல்ல ஆரம்பித்து விட்டனர்.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு வெயில் மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


அதன்படி, தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் பொதுவாக வறண்ட வானிலையே  நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.


22.2.2025:




தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலேயே நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 


23.2.2025 மற்றும் 24.2.2025:


தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை  நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். 


25.2.2025 மற்றும் 26.2.2025:


தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேலைகளில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மிக மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்க கூடும் என தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

news

உலக தாய் மொழி தினம்.. தமிழுக்கு எதிராக நிகழ்ந்து விட்ட தீமைகள் அனைத்தும் எங்கிருந்து தொடங்கின?

news

PMSHRI திட்டத்தில் இணைந்தால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்: பாஜக தலைவர் அண்ணாமலை

news

ஏழை பிள்ளைகளை கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டமே புதிய கல்விக் கொள்கை திட்டம்.. சபாநாயகர் அப்பாவு

news

ஒரு நாட்டைக் கைப்பற்ற.. அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி.. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர்

news

Welcome To Tamil Nadu: நேற்று அந்த ஹேஷ்டேக்.. இன்று இந்த ஹேஷ்டேக்.. நடுவுல புகுந்த தவெக.. அடடே!

news

கூல் தோனி.. கிரிக்கெட் எதிர்காலம் குறித்து போட்ட சூப்பர் போஸ்ட்.. உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்!

news

உலக தாய்மொழி தினம் 2025.. தாயின் சிறந்த கோயிலும் இல்லை.. தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை!

news

மனைவியைப் பிரிந்தார் யுஸ்வேந்திர சாஹல்.. 4 வருடத்தில் கசந்து போன வாழ்க்கை.. ரசிகர்கள் ஷாக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்