சென்னை: வங்கக்கடலில் வரும் 22ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளது. ஆனால் இந்த புயல் தமிழகத்திற்கு இல்லை. இது ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளுக்கு செல்லும். வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி மற்றும் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக விழுப்புரம் ஈரோடு திருவண்ணாமலை உளுந்தூர்பேட்டை மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சென்னை உட்பட வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. நாளையும் இதே சூழலில் மீண்டும் இரவு முதல் காலை வரை மழை நீடிக்கும்.
குறிப்பாக வட தமிழகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலையிலும், இரவு முதல் காலை வரையும் மழை தொடர வாய்ப்புள்ளது. இந்த மழையால் பாதிப்புகள் ஏற்படாது. அடுத்த சில நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கும் இதுபோன்ற மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் அக்டோபர் 22ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடும். ஆனால் இந்தப் புயல் தமிழகத்திற்கு இல்லை. இது தொடர்பாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளுக்கு நோக்கி செல்லும். இதனால் அப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!
14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!
மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி
{{comments.comment}}