Weather Report: சென்னையில் பகலில் வெயிலும்.. மாலையில் நல்ல மழையும் பெய்ய வாய்ப்பு!

Jul 05, 2024,11:42 AM IST

சென்னை:   சென்னையில் இன்று பகலில் வெப்பம் கொளுத்தினாலும், மாலையில் பரவலாக நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


சென்னையில் பருவநிலை மாற்றத்தால் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்தாலும் பகல் நேரத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வெயில் அடித்த சுவடே தெரியாமல் மாலையில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து விடுகிறது.  நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்தில் ஆறு சென்டிமீட்டர் மழை பெய்தது. 




ஜூலை மாதத்தில் சராசரியாக 10 cm மழை பெய்யும். அதில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்திலேயே 6 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார். 


இந்த நிலையில் சென்னை மழை குறித்த மீண்டும் ஒரு அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதன்படி, அரக்கோணத்தில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் எதிரொடியாக இன்று  பகலில் வெயில் வாட்டி எடுத்தாலும் மாலை நேரங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்ய கூடும். இது தவிர கர்நாடக மாநிலம்  குடகில் காவிரி நீர் பிடிப்பு பகுதியான கேஆர் எஸ் பகுதியிலும் கனமழை தொடரும்.


அதேபோல் வயநாடு காவிரி கபினி அணை பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில நாட்களில் கபினி அணை நிரம்பிவிடும். இதனால் கபினியில் இருந்து நேரடியாக மேட்டூருக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்