சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து சென்னையில் ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். அப்போது வெயில் குறைந்து சாரல் மழையுடன் சில்லென்ற வானில் நிலவும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக நல்ல மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் அதீத கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் கடந்த ஜூன் மாதத்தில் சராசரியாக 60 மில்லி மீட்டர் வரை பெய்ய வேண்டிய மழை அளவு கூடுதலாக 250 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் ஜூலை மாதத்தில் சராசரியாக 100 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் தற்போது 180 மில்லி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவ மழையின் சராசரி மழை அளவு 480 மில்லி மீட்டர். ஆனால் 120 நாட்களில் கிடைக்க வேண்டிய மழை அளவு 40 நாட்களிலேயே கிடைத்துள்ளன.
இதனால் சென்னையில் வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் மழை இருக்காது. ஏனெனில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப சலனம் இல்லாமலும் வெயில் அதிகமாக இல்லாமலும் அவ்வப்போது சாரல் மழையை எதிர்பார்க்கலாம். சென்னையில் வருகின்ற ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரிக்கு ரெட் அலர்ட்:
அதேபோல் நீலகிரி கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது அடுத்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் நீலகிரிக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 37.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.அப்பர் பவானி பகுதியில் 24.8 சென்டிமீட்டர் மழையும், எமரால்டு பகுதியில் 13.5 cm மழையும் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது. சேரங்கோட்டில் பதினொரு புள்ளி 3 சென்டிமீட்டர், மேல் கூடலூர் 10.8 சென்டிமீட்டர், பந்தலூரில் 9.2 செமீ, ஒவேலியில் 8.8 சென்டிமீட்டர்,பாடந்துறையில் 8.5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அதேபோல் நெல்லை மாவட்டம் நாலுமுக்கு 10 சென்டிமீட்டர், ஊத்துப்பகுதியில் 8.8 சென்டிமீட்டர், காக்காச்சியில் 6.6 செமீ மழை பெய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
பருவமழை நெறிமுறைகள்:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பவானி, நொய்யல் போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றுகளில் இறங்கவோ குளிக்கவோ கூடாது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் செல்பி கூடாது.மழை நீர் தொடர்பான புகார்களுக்கு 1077 என்ற எண்ணில் அழைக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}