சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்னும் சில மணி நேரத்தில் வட சென்னையில் இருந்து தொடங்கி நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையாக பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ரன் தெரிவித்துள்ளார்.
குறைந்த காற்றவுத்தத் தாழ்வுப் பகுதியானது தற்போது சென்னைக்கு அருகே வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதிகளில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.பின்னர் இது தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் சென்னை மழை குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னையில் இன்றும் நாளையும் பெய்யும் மழையை ரசிக்கலாம். சென்னைக்கு மிகக் குளிர்ச்சியான இரவுகளில் ஒன்றைக் கொடுத்த (நேற்று) குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் வட கடலோர பகுதிகளில் மழை பொழிவதற்கு உகந்த நாட்களாக உள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அடுத்த 1-2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யத் தொடங்கும்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழக கடற்கரைக்கு அருகில் வந்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர பகுதிகளில் நேற்று குளிர் மிக மிக அதிகமாக இருந்தது. இன்று ஈரப்பதம் நிலப் பகுதிக்கள் நகர்ந்து சிறிது வெப்பத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. ஆனால் மழை மேகங்களின் பெரும்பகுதி இன்னும் கடலில்தான் உள்ளன.
சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் மிதமான மழையாக வட சென்னையிலிருந்து தொடங்கி அதன்பிறகு நகரின் பிற பகுதிகளில் பெய்யும். மாணவர்கள், அலுவலகம் செல்வோர் தங்களது பணிகளை தொடர்ந்து செய்யலாம்.
சென்னைக்கு இதுவே கடைசி மழையாக இருக்குமா? என்றால் இல்லை. கிறிஸ்துமஸுக்குப் பிறகு, 26, 27ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்யும். இருப்பினும் இன்றும் நாளையும் நகரத்திற்கு மழைக்கான கடைசி நல்ல வாய்ப்புகள். ஏராளமான குடிநீரைக் கொடுத்த இந்த பருவமழையை அனுபவிப்போம்.
இந்த மழையால் நீங்கள் பயப்பட தேவையில்லை. அணைகள் நிரம்பியிருப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் டெல்டா மாவட்டங்கள் மற்றும், விழுப்புரம் கடற்கரை, புதுச்சேரி கடலூர் போன்ற பகுதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை. தென் தமிழகத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரியில் மட்டும் ஓரளவு மிதமான மழை பெய்யும். பொதுவாக இந்த மழை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுமே இருக்கும். ஒருவேளை ராணிப்பேட்டையிலும் மழை பெய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
புதுச்சேரியில்.. டிசம்பர் 28ம் தேதி பா.ம.க பொதுக்குழு கூட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
புஷ்பா-2.. ஜாமினை ரத்து செய்யக் கோரி.. சுப்ரீம் கோர்ட்டை அணுகும் போலீஸ்.. அல்லு அர்ஜூனுக்கு சிக்கல்
Laapataa Ladies.. ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறத் தவறியது.. இந்தியாவுக்கு ஏமாற்றம்!
தென்னிந்தியர்கள் தேவையில்லை.. நொய்டா நிறுவனத்தின் அறிவிப்பால்.. கொந்தளிக்கும் சோசியல் மீடியா!
Todays gold rate: தங்கம் விலை நேற்று உயர்ந்தது.. இன்று கொஞ்சம் குறைந்தது.. சவரன் எவ்வளவு தெரியுமா?
Srivaikudam Station Master.. தீரமாக செயல்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு.. ரயில்வே உயரிய விருது!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு.. ஆர். அஸ்வின் திடீர் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
விரிவடையும் புதுமைப் பெண் திட்டம்.. அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி மாதம் ரூ. 1000 உதவி!
வட சென்னையில் தொடங்கி.. படிப்படியாக மழை பரவும்.. இன்றும், நாளையும் பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன்
{{comments.comment}}