மழையெல்லாம் முடிஞ்சு போச்சு.. போங்க போங்க.. நாளைல இருந்து மழைக்கு பிரேக்.. தமிழ்நாடு வெதர்மேன்!

Dec 31, 2024,08:42 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்தது. இதனைத் தொடர்ந்து மழையின் அளவு குறைந்து மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை அவ்வப்போது பெய்து வந்தது. 


இருப்பினும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் நிலவினாலும் மாலை இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது . பகலில் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இதனால் வெயில் குறைந்து தமிழ்நாடு முழுவதும்  வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. 


இந்த நிலையில் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.




அதன்படி, மாஞ்சோலை மலைப்பகுதியில் ஊத்து மற்றும் நாலுமூக்கு பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது.  அதாவது திருநெல்வேலி மாவட்டம் ஊத்து 140 மில்லி மீட்டர் மழையும், நாலு  மூக்கில் 128 மில்லி மீட்டரும் மழையும், கக்காச்சி பகுதியில் 118 மில்லி மீட்டர் மழையும், மாஞ்சோலை பகுதிகளில் 102 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 27 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


மாஞ்சோலை மலைப்பகுதியில் இன்றும் கனமழை பெய்யும்.  நாளை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வட கிழக்குப் பருவ மழைக்காலமானது இன்றோடு நிறைவு பெறவுள்ளது. அருமையான மழையைக் கொடுத்த இந்த சீசனுக்கு நன்றி சொல்லி.. அடுத்து வரப் போகும் வாட்டி வதைக்கும் வெயில் காலத்துக்காக வியர்க்க விறுவிறுக்க காத்திருப்போம்.!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 வருட போராட்டத்திற்குப் பிறகு.. திரைக்கு வரும் மதகஜராஜா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

news

தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த ரூ. 87 கோடி நிதி.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு

news

டாக்டர் அன்புமணி ராமதாஸ்.. பனையூரில் ஆதரவாளர்களுடன்.. 3வது நாளாக தீவிர ஆலோசனை

news

வீட்ல யாருமே இல்லை.. எதுக்கு ரெய்டுன்னும் தெரியலை.. ED சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன்

news

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.58,000த்தை கடந்தது

news

கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. பதட்டம்.. அருகாமை பள்ளிகளுக்கு விடுமுறை

news

சுவிட்சர்லாந்தில் முகத்தை மறைக்கும் புர்கா அணிய தடை.. புத்தாண்டிலிருந்து அமலுக்கு வந்த சட்டம்

news

பொங்கல் தொகுப்பு.. தொடங்கியது டோக்கன் விநியோகம்.. வீடு தேடிச் சென்று வழங்க முதல்வர் உத்தரவு

news

India vs Australia 5th test.. கடைசி நிமிடத்தில் ரோகித் சர்மா விலகல்.. பும்ராதான் கேப்டன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்